செங்கல்பட்டு: 150 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு!

செங்கல்பட்டு அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலை திருட்டு

Update: 2021-05-28 04:20 GMT

மாயமான விநாயகர் ஐம்பொன் சிலை (பழைய படம்)

செங்கல்பட்டுவை  அடுத்த பட்டரவாக்கத்தை அடுத்த இளந்தோப்பு பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான வெள்ளை கண்ணு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 150 ஆண்டுகள். பழமையான ஒன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட 28 கிலோ எடையுடைய விநாகர் சிலை இருந்துள்ளது.

வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோவில் பூசாரி கோவிலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த ஐம்பொன் சிலை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் தடவியல், கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News