அச்சிறுப்பாக்கம் கோவிலில் பா.ஜ.க பிரமுகர் சுவாமி தரிசனம்

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் சுவாமி தரிசனம்.

Update: 2021-04-19 14:00 GMT

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளரும் துறைமுகம் தொகுதி வேட்பாளருமான வினோத்செல்வம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்து அச்சுமுறி விநாயகர், ஸ்ரீ ஆட்சீஸ்வரர் உடனுறை இளங்கிளி அம்மனை வழிபட்டார். திருக்கோவில் சார்பில் மரியாதை நியமித்தமாக மூத்த அர்ச்சகர் சங்கர்சிவாச்சாரியார் தலைமையில் மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தலைவர் ஆர்.முருகன், சிறப்பான வரவேற்பு அளித்தார், உடன் மாவட்ட தலைவர் பாலாஜி, முன்னாள் நகர தலைவர் சந்தோஷ், மதுராந்தகம் நகர தலைவர் சம்பத்குமார், மதுராந்தகம் நகர பொதுச்செயலாளர் தினகரன், பிராச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ஜி.நாசினிபேகம், நகர பொருளாளர் பொன்மணி, அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல பொறுப்பாளர் செல்வம், உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News