செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு கோயிலில் பக்தர்களுக்கு தடை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மூன்று நாட்களுக்கு கோயில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-01 09:00 GMT

பைல் படம்

ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு திருப்போரூர் கந்தசுவாமி முருகன் கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள், இதன் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிரகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்படுத்தியது

எனவே பொது மக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள. அருள்மிகு திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் உட்பட அனைத்து திருக்கோயில்களையும் மூடிடவும் அதேபோல் பக்தகர்கள் அதிகமாக கூடும் என எதிர்பார்க்கப்படும் திருக்கோயில்கள் உட்பட மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் திருக்கோயில்கள் ஆடி கிருத்திகை முன்னிட்டு 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இன்று முதல் 3ஆம் தேதி (செவ்வாய்கிழமை) வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனால் இன்று காலை முதல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாத காரணத்தினால் கோவிலின் வாசல் முன்பு சாலையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்

ஒவ்வொரு கோவில் வாசலிலும் தாராளமாக 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் மூன்று நாட்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பக்தர்கள் அதிகம் கூடும் கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News