தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன.

Update: 2021-11-04 14:57 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் நூறு சதவீதம் நீர் நிரம்பிய ஒரு ஏரியின் தோற்றம்.

குறைந்த உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஐந்து தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது இதில் 48 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது.

75 சதவீதத்துக்கு மேல் 51 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 114 ஏரிகளும் 25 சதவீதத்திற்கு மேல் 187 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 128 ஏரிகள் நிரம்பி உள்ளது. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News