ஊரப்பாக்கத்தில் தனிஷ்க் ஷோரூமின் 42வது கிளை திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் தனிஷ்க் ஷோரூமின் 42வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2021-12-16 06:30 GMT

தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூமின் 42வது கிளையின் திறப்பு விழா ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது..

டாடா குழுமத்தின் அங்கமான தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூமின்  42வது கிளை திருச்சி- சென்னை சாலை ஊரப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. டைடன் கம்பெனி லிமிடெட் நிர்வாக இயக்குனர் சி.கே வெங்கட்ராமன் புதிய கிளையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் டைட்டன் கம்பனியின் தெற்கு பிராந்திய வர்த்தகப்பிரிவு தலைவர் ஷரத், தனிஷ்க்கின் தெற்கு பிராந்திய வர்த்தக மேலாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய டைடன் கம்பெனி லிமிடெட் நிர்வாக இயக்குனர் சி.கே வெங்கட்ராமன்:- இந்தியா முழுவதும் எங்களுக்கு கிளைகள் உள்ளது அதில் தமிழகத்தில் மட்டும் 42 கிளைகளும், உள்ளது. சுத்தமான, தரமான தங்க நகைகளை தருகிறோம். எனவே, ஜிஎஸ்டியால் தனிஷ்க் ஷோரூமுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வளர்ச்சிதான். 3400 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் 5,000க்கும் மேற்பட்ட அழகிய டிசைன்கள் உள்ளன.

திறப்புவிழா சிறப்பு சலுகையாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் வாங்கும் தங்க நகை அல்லது வைர நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சிறப்பு சலுகைகள் உள்ளன.

இம்மாதம் டிசம்பர்  19ம் தேதி வரை இச்சலுகையை பெறலாம். வாடிக்கையாளர்கள் இலவச தங்க நாணய சலுகைக்கு பதிலாக வைர நகை மீது தொடரும் தள்ளுபடியை கூட பெறலாம்' என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தின் உள்ள ஊரப்பாக்கம் 42வது கிளை வியாபார கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News