செங்கல்பட்டு மாவட்டத்தில், 34 ஏரிகள் 50 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில், 34 ஏரிகள் 50 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது

Update: 2021-10-30 04:00 GMT

செங்கல்பட்டு ஏரி

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரி மற்றும் பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 625 ஏரிகளில், 34 ஏரிகள் 50 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 625 ஏரிகளில், காட்டாங்குளத்தூரில் உள்ள 255 ஏரிகளில் 5 ஏரிகளில் 75 சதவிகிதமும், 34 ஏரிகள் 50. சதவிகிதமும், 216 ஏரிகள் 25 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது.

திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 81 ஏரிகளில் 19. ஏரிகள் 50 சதவிகிதமும், 65 ஏரிகள் 25 சதவிகித கொள்ளளவும் எட்டியுள்ளது.

பரங்கிமலை ஒன்றியத்தில், உள்ள 13 ஏரிகளில், 1 எரி 75 சதவிதமும், 3 ஏரிகள் 50 சதவிகிதமும், 9 ஏரிகள் 25 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளன.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் மொத்தம் 74 ஏரிகள் உள்ளன. இதில், 4 ஏரிகள் 75 சதவிகித கொள்ளளவும், 12 ஏரிகள் 50 சதவிகிதமும், 60 ஏரிகள் 25 சதவிகித கொள்ளளவும் எட்டியுள்ளன.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில், உள்ள 108 ஏரிகளில், 108 ஏரிகளும் 25 சதவிகித கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளது.

அதேபோல், மதுராந்தகம் ஒன்றியத்தில், உள்ள 132 ஏரிகளில் 132 ஏரிகளும் 25 சதவிகித கொள்ளளவு மட்டிமே நிரம்பியுள்ளது.

சித்தாமூர் ஒன்றியத்தில், உள்ள 69 ஏரிகளும் 25 சதவிகித கோள்ளளவை மட்டுமே எட்டியுள்ளது.

அதேபோல் லத்தூர் ஒன்றியத்தில் உள்ள 61 ஏரிகளிலும் நீர் மட்டுமே 25 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News