செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: 13 பேர் பலி - மருத்துவா்கள் திடீா் போராட்டம்

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து,மருத்துவமனை மருத்துவா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-05-05 10:30 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தனா்.இதையடுத்து மருத்துவமனை மருத்துவர்கள்,மருத்துவ உதவியாளா்கள் இன்று காலை மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மருத்துவமனைக்கு தேவையான ஆகசிஜனை தட்டுப்பாடு இன்றி உடனே வழங்க வேண்டும்.மருத்துவ உதவியாளா்கள் பணி காலியாக இருப்பதை இந்த அவசர காலத்தில் தாமதம் செய்யாமல் உடனே நிரப்ப வேண்டும்.

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலிருந்து மருத்துவா்களை மற்ற மருத்துவமனைக்கு மாற்றுவதை உடனடியாக தவிா்க்க வேண்டும். அவ்வாறு இடம்மாற்றம் செய்யப்பட்ட மருத்துவா்களை மீண்டும் இங்கு பணியமா்த்த வேண்டும்.இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவா்கள்,மருத்துவ உதவியாளா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் கோஷமிட்டனா்.

இந்நிலையில் மருத்துவ உயா் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவா்களுடன் பேசினா். ஆக்சிஜன் பற்றாக்குறை,மருத்துவ உதவியாளர்கள்,மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை சரிசெய்வதாகவும்,

தினந்தோறும் ஆக்சிஜன் பற்றாக்குறை இன்றி வழங்கபடும் என்று மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்தனா்.அதை ஏற்றுக்கொண்டு மருத்துவா்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனா்.


Tags:    

Similar News