செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

Update: 2021-03-20 06:45 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் கேளம்பாக்கம், திருப்போரூர்,அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், செய்யூர், ஆத்தூர், ராமாபுரம், மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.பனிப்பொழிவு காரணமாக சென்னை மார்க்கம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குடன் அணிவகுத்தன .பனியால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags:    

Similar News