காந்தி தியானம் செய்த இடத்தில் ஆட்சியர் மரியாதை

Update: 2021-02-02 10:00 GMT

செங்கல்பட்டு அருகே காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தில் மகாத்மா காந்தியடிகள் தியானம் செய்த இடத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நினைவஞ்சலி செய்தார்.

கடந்த 1946 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு இரயில் மூலம் செல்லும் போது காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் சிறப்பு தியானம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, மகாத்மா காந்தியுடன் காமராஜர், ராஜாஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் பயணம் செய்ததாகவும் மகாத்மா காந்தியடிகள் அன்று அதிகாலையில் காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் காலை தியானம் செய்ததாகவும், இந்த பிப்ரவரி 2 ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தி இயக்கம் சார்பில் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தில் நினைவஞ்சலி செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில் இன்று பிப்ரவரி 2 ம் நாள் அப்பகுதியில் மகாத்மா காந்தி நினைவாக மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் காந்தி சிலைக்கு மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார். பின்னர் காந்தியடிகள் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தில் தியானம் செய்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அப்பகுதியில் பவளவிழா நினைவு நுழைவாயிலை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் விரைவில் பரிசீலனை செய்து பவளவிழா நினைவு நுழைவாயில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News