செங்கல்பட்டு பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா

Update: 2021-01-28 09:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளியில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச பால்குட விழா இன்று நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி மலை மீது பழைமை வாய்ந்த பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பால்குட விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காலை பால்குட விழா நடந்தது.பாலாற்றின் கரையோரமாக யாக சாலைகள் அமைத்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய பால்குட ஊர்வலத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடங்களை சுமந்து காவடியாட்டம் ஆடியும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின் 12.30 மணி அளவில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அபிஷேக பாலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாகி குமார், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சல்குரு, கோவில் விழாக்குழுவினர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News