அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன்பிடி திருவிழாவில் கூடிய மக்கள்

அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன் பிடி திருவிழாவில் கூடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.

Update: 2021-06-04 05:19 GMT

 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில்  மீன் பிடி திருவிழா நடைபெற்றது. 

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கை செயல்படுத்தி வருகிறது. ஆனால் கிராமப்புறங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

ஆனால் கொரோனாவை பற்றி கவலைப்படாமல் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமமக்கள் தங்களது கிராமத்தில் மீன்பிடித் திருவிழாவை நடத்தியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமத்தில் உள்ள பெரியஏரி தண்ணீரை நம்பி சாகுபடி செய்யும் பொதுமக்கள், சம்பா, குறுவை சாகுபடி முடிந்த பிறகு மீன்பிடி திருவிழா நடப்பது வழக்கம்.

கடந்தஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு நடைமுடையில் இருந்போது மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நக்கம்பாடி, சொக்கநாதபுரம், நம்மங்குணம், செந்துறை ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க இன்று பெரியஏரியில் குவிந்தனர்.

சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஏரியில் மீன்பிடி வலைகளுடனும், வேட்டி, புடவைகளுடன் சென்று குழுக்களாக நின்று ஏரியில் மீன்பிடித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் மணிகன்டன், மீன்பிடி திருவிழா குறித்து செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர்.

போலிசாரை கண்டதும் பொதுமக்கள் கலைந்துசென்றனர். செந்துறை போலிசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News