காசியில் இலவச உணவுடன் பாதுகாப்பான தங்குமிடம்..!
GRT நிறுவனமானது காசி அல்லது வாரணாசியில் ஹோட்டல் கம் சத்திரத்தை தொடங்கியுள்ளது.;
தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அறை வாடகைகள் பெயரளவுக்கு தான் உள்ளன. உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. வாரணாசிக்கு சென்று, ஜிஆர்டியால் கட்டப்பட்ட சத்திரத்தில் தங்கியிருந்த பலரும் இது குறித்து தெளிவாக விளக்கி உள்ளனர்.
பெயர் மட்டும் சத்திரம். ஆனால் அறைகள் அனைத்து வசதிகளுடன் அற்புதமாக உள்ளன. இவ்வளவு குறைந்த விலையில் இது போன்ற அறைகள் எங்கும் கிடைக்காது. அதிகபட்சம் 3 பேர் ஒரு அறையில் தங்கலாம். காலை காபி, சிற்றுண்டி , மதியம், மாலை டீ மற்றும் இரவு உணவு பரிமாறுகிறார்கள்.
அறை சேவை இல்லை. அனைத்து உணவுகளும் இலவசம் மற்றும் வரம்பற்றது. கிருத்திகை மற்றும் அமாவாசை அன்று வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் உணவு பரிமாறுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், வெளி உணவு நமக்கு ஒத்துவராது என்பதால், விருந்தினர்களை அங்கேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அறையைக் காலி செய்யும் போது அன்னதான அறக்கட்டளைக்கு பங்களிக்க விரும்பினாலும் அவர்கள் ஏற்பதில்லை. மாறாக அங்கு ஒரு டிப்ஸ் பாக்ஸ் இருக்கும். டிப்ஸ் கொடுப்பது கட்டாயமில்லை. விருப்பம் இருந்தால் முடிந்த அளவு அதில் போடலாம். அவர்களின் சேவை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் அங்கு செல்ல நிறைய அறைகள் கிடைக்கும். ஜிஆர்டி அறைகள் நட்சத்திர ஹோட்டல் அறைகள் போல... அனைத்து லேட்டஸ்ட் மாடல் ஹைஃபை ஃபிட்டிங்குகளுடன் உள்ளன.
இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள அனைத்து இடங்களும்... சங்கர மடம், கங்கை, விஸ்வநாதர் கோயில் மற்றும் பிற கோயில்களுக்குச் செல்ல ஏராளமான மின்சார வாகனங்கள் கிடைக்கும். GRT ஹோட்டல்..தொடர்பு எண்.7607605660.
தங்குமிடத்திற்கு அவர்களின் இணையதளத்தைப் பார்க்கவும். www.grtkashichatram.com அல்லது GOOGLE IT மற்றும் உள்நுழையவும். ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு. காசிக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
தகவல் உதவி: சைவத்திரு வாகை கணேசன், தியாகராயநகர்.