அர்த்தராத்தியில் குடை பிடிப்பானா?

அர்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.;

Update: 2024-11-05 04:15 GMT

கண்ணபிரான்.

தன்னை நம்பி வர்றவங்களை காக்கும் குணம் உடையவர்கள். அது எந்த நேரமானாலும் சரி. அவர்களுக்கு அளிக்கும் உதவியைத் தயங்காமல் செய்பவர்கள்.

ஒரு நாள் அர்ஜுனன் கண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்த போது, நம்முடைய சகோதரர் தர்மர் அனைவருக்குமே தானம் செய்கிறார். இருப்பினும் கொடைவள்ளல் என்று கர்ணணை ஏன் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று சந்தேகமாக கேட்க,

கண்ணனோ தன் மாயச்சிரிப்புடன் இதற்கு பதிலைச் சொல்வதைக் காட்டிலும் நீ பார்த்து புரிந்துகொள்வதே சிறந்தது என்று தன் சக்தியால் விடாமல் மழை பொழிய செய்த கண்ணன், அதன் பிறகு சில நாள் கழித்து மாறுவேடத்தில் இருவரும் தர்மரிடம் செல்கிறார்கள்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று தர்மர் கேட்க, எங்கள் வீட்டில் உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் இருக்கிறது. ஆனால் விறகுகள் நனைந்து விட்டதால் அவற்றைச் சமைப்பதற்கு விறகுகள் தேவை. தந்து உதவுங்கள் என்று கேட்டனர்.

அதைக் கேட்ட தர்மன் அரண்மனை சமையல் களஞ்சியத்தில் விசாரித்து, பொன், பொருள் என்றால் என்னால் உடனே தந்துவிட முடியும். ஆனால் நீங்க கேட்பது சற்றே யோசிக்க வேண்டிய விஷயம். தற்சமயம் எங்களிடமும் அரண்மனையில் உள்ளோருக்குச் சமைக்க தேவையான விறகுகள் மட்டுமே இங்கே இருக்கின்றது. அதனால் தர இயலாத சூழலில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால், இங்கே வந்து விருந்துண்ணலாமே என்றார்.

பிறகு வருதாகக் கூறிய கண்ணன் அர்ஜுனனை கர்ணனிடம் அழைத்துச் சென்று அங்கேயும் இதே காரணத்தைக் கூறினார்கள். கர்ணன் சற்றும் யோசிக்காமல், தன் அரண்மனையில் உள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் உடைத்து, அவற்றைக் கொண்டு வந்து அவர்கள் இருவரிடம் தந்து இதைப் பயன்படுத்தி சமைத்து பசியாறுங்கள் என்று சொன்னார்.

அர்ஜுனன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, கண்ணன் அவனைப் பார்த்து இப்போது புரிகிறதா, அர்ஜுனா கர்ணனை ஏன் மக்கள் கொடைவள்ளல் என்று சொல்கிறார்கள் என்று கேட்க, அர்ஜுனனும் அதை ஒப்புக் கொண்டான். நம்மிடம் இருப்பதை அளிப்பதை விடவும், நம்பி வந்து விட்டவர்களுக்கு தேவையானதை அளிப்பதே சிறந்த தானம் என்கிறது இக்கதை.

இப்போது புரிகிறதா...? அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பது மறுவி அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்று மறுவி வந்த பழமொழி பற்றி.

Tags:    

Similar News