பூமியில் மனிதர்களாக பிறந்த நாமெல்லாம் பலியாடுகளா?

உங்களை பழிவாங்குவதற்காக பிரபஞ்ச சக்தி உங்களை பூமிக்கு அனுப்பவில்லை.

Update: 2024-06-28 04:54 GMT

பிறப்பு (கோப்பு படம்)

கோழி முட்டைக்குள் இருக்கும் குஞ்சு அதன் நிலையை நினைத்து அஞ்சலாம். ஒரு படி மேலே சென்று "இறைவா" என்னை இந்த கூண்டில் இருந்து காப்பாற்றி விடு என்று கெஞ்சலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று "என்ன வாழ்க்கை இது! இப்படி மாட்டிக் கொண்டு முழிக்கின்றேனே ...இப்படி ஒரு திடமான இரும்பு கூண்டுக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்றேனே. என்ன கருணை இல்லாத கடவுள் இப்படியா வாழ்க்கையை தருவது என மிஞ்சலாம்"

அஞ்சினாலும், கெஞ்சினாலும் மிஞ்சினாலும் குஞ்சு செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அதன் மூக்கால் ஒரே ஒரு முறை அதை சுற்றி இருக்கும் கூட்டில் கொத்தினால் போதும் அது திறந்து கொள்ளும். கொத்திய வினாடியே குஞ்சுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் தான் பிரபஞ்சம் வாழ்வை பிரசவிக்கிறது.

எங்கும் நிரம்பி இருக்கும் பிரபஞ்ச உணர்வு தான், பிரபஞ்ச சக்தியாக மாறி இந்த உலகமாகவும், மழையாகவும், மரமாகவும், நதியாகவும், உயிரினங்களாகவும் பூக்கின்றது. தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. பிரபஞ்ச சக்தி எந்த ஒரு இடத்திலும் தவறு செய்வதே இல்லை. யார் ஒருவருக்கும் அது தண்டனை அளிப்பதே இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதி தான் நாமும். அதாவது பிரபஞ்ச சக்தி தான் மனிதர்களாகப்  பிறப்பெடுத்துள்ளது. எனவே மனிதர்கள் வேறு, பிரபஞ்ச சக்தி வேறு என பிரித்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. நாம் பிறப்பெடுத்ததன் நோக்கம் அறிந்து இறைபக்தியை மனதில் கொண்டு, இறைவன் தன்னுடன் இருக்கிறார், தனக்குள் இருக்கிறார், தான் தான் இறைவன் என்ற நிலையை உணர்ந்து செயல்பட்டாலே பல குழப்பங்களில் இருந்து மீண்டு விடலாம்.

Tags:    

Similar News