நாளை கிருஷ்ணஜெயந்தி விழா நாடெங்கிலும் கோலாகல உற்சாகம்

krishna jayanthi festival in tamil கிருஷ்ணர் பிறந்த நாளைக்குறிக்கும் விதமாக நாடு முழுவதும் இப்பண்டிகையானது உற்சாகமாக நாளை கொண்டாடப்படுகிறது.

Update: 2023-09-05 11:39 GMT

krishna jayanthi festival in tamil

இந்தியா முழுவதிலும் நாளை கிருஷ்ணஜெயந்திவிழா கோலாகல உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பண்டிகையை ஜென்மாஷ்டமி என வட மாநிலங்களில் அழைப்பர்.கிருஷ்ணஜெயந்தி விழா ஏன் கொண்டாடப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றியும் இப்பண்டிகை இந்தியாவில் எங்கெங்கு கொண்டாடுகின்றனர் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது.

krishna jayanthi festival in tamil



மஹா விஷ்ணு தீமை மற்றும் பாவிகளிடம் இருந்து உலகைப் பாதுகாக்க பல அவதாரங்களை எடுத்தார். அத்தகைய அவதாரமாக ராஜா வாசுதேவ மற்றும் ராணி தேவகி தேவிக்கும் பிறந்த குழந்தையே கோகுல கண்ணன். உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாதவ குலத்தில் மதுரா என்னுமிடத்தில் கண்ணன் அவதரித்தார். கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பிறந்த நாள்.

அனைத்து இந்து மத விழாக்களில் மிகப்பெரிய பண்டிகையாக இது திகழ்கிறது. இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.சிறிய வயதுக்குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை இப்பண்டிகையினையொட்டி பல பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்துவர். பின்னர் சிறந்த வேடமிட்ட குழந்தைகளுக்கு பரிசினை அளிப்பது வாடிக்கை. அதேபோல் பல்வேறு கோயில், மற்றும் ஆன்மிக அமைப்பின் சார்பிலும்,இந்துமதத்தின் அமைப்பின் சார்பிலும், மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படக்கூடிய பண்டிகையாக இது திகழ்கிறது. இப்பண்டிகையினை இடத்திற்கு தகுந்தாற்போல் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, என அழைக்கின்றனர்.

krishna jayanthi festival in tamil


கோகுலாஷ்டமி தினத்தன்று தென்இந்தியாவில் உள்ள பெண்கள் அழகாக இறைவனை வரவேற்க தயாராக தங்கள் வீடுகளை அலங்கரித்து அவர்கள் பல்வேறு இனிப்பு வகைகளைத் தயார் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்கின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் இப்பண்டிகையின் முக்கிய அம்சமாகும். அதாவது கோகுல கண்ணன் சிறுவயதில் தன் நண்பர்களுடன் வெண்ணெய் திருடித்தின்றதை நினைவூ ட்டும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

krishna jayanthi festival in tamil


ஒரு குழந்தையின் கால் தடங்களை அரிசிமாவு கோலமிட்டு பூஜையறை முதல் வாசல் வரை வரவேற்பது சிறப்பம்சமாகும். தேங்குழல், வெல்லசீடை,காரசீடை, முறுக்கு என அவரவர்களின் வசதிக்கேற்றவாறு இறைவனுக்கு விசேஷ பதார்த்தங்களை நைவேத்தியம் செய்வதும் வழக்கம்.

கோலாகல கோகுலாஷ்டமி

இந்துக்கள் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தமையால் விரதமிருந்து வழிபடுவர். கோவில்களில் அன்றைய தினம் விசேஷ அலங்காரங்களைச் செய்து வீடுகளில் ஊசலாட்டம் மற்றும் தொட்டில்கள் வைக்கப்படும். நள்ளிரவில் பக்தர்கள் பக்திப் பாடல்களை நடனம், மற்றும் பரிமாற்றம் பரிசுகள் சுற்றி சேகரிக்கப்பட்டு அது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும்.

krishna jayanthi festival in tamil


குறிப்பாக வீட்டில் உள்ள குழந்தைகள் கிருஷ்ணனாக அவதாரமெடுத்தது போல் பாவித்து அவர்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளைத் தயார்செய்வதும் வழக்கம். பாட்டு, பாராயணம், சிறப்பு பூஜை என அல்லோலகலப்படும். கோவில்களில் கிருஷ்ணருக்கு தேவையான சிறப்பு அலங்காரங்கள் செய்த பின்னர் சங்கு ஊதப்பட்டு பின்னர் சமஸ்கிருத பாடல்கள் பாடப்படும். பின்னர் பக்தர்களால் இறைவனுக்காக தயாரிக்கப்பட்ட பட்சணங்களை வைத்து நைவேத்தியம் செய்தபின்னர் அவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வாடிக்கையான நிகழ்வாக நடந்து கொண்டு வருகிறது.

உறியடித்திருவிழா

கோகுலாஷ்டமி தினத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கோலாகலமாக கொண்டாடு வர். சிறிய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு பரிசுகள் வழங்குவதும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்துவதும் வாடிக்கையான வழக்கமான ஒன்று. இத்திருவிழாவின் கடைசி தினத்தன்று உறியடித்திருவிழாவும் நடத்துவது வழக்கம். அன்றையதினம் தெருவே கோலாகலப்படும். உறியடித்திருவிழாவில் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்பர். உறியைஅடிப்பவரை அடிக்க விடாமல் த ண்ணீர்கொண்டு அவரது செயலுக்கு முட்டுக்கட்டைபோடுவார்கள். இருப்பினும் அதனையும் மீறி கட்டி விடப்பட்டுள்ளவற்றைப் பறிப்பது அடிப்பதுதான் வீரத்திற்கு அழகாக கருதப்படுகிறது.

krishna jayanthi festival in tamil


பல்வேறுமாநிலங்களில் கொண்டாட்டம்

அஸ்ஸாம்

இப்பண்டிகையானது அசாம் மாநிலத்திலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடக்கும். பிறகு சமைக்கப்பட்ட நைவேத்தியத்திற்கு பயன்பட்டுத்தப்பட்ட உணவினை அனைவருக்கும் அங்கு பிரசாதமாக வழங்கும் வழக்கம் உண்டு.

மணிப்பூர்

இம்மாநிலத்திலும் இப்பண்டிகையானது இரண்டு கோவில்களில்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மணிப்பூர் தலைநகர்ரான இம்பாலிலுள்ள இஸ்கான் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

krishna jayanthi festival in tamil



நேபாளம்

எண்பது சதவீத நேபாள மக்கள் இப்பண்டிகையினை நள்ளிரவு வரை நோன்பிருந்து ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுகின்றனர். பகவத்கீதை, பஜனை எனப்படும் மத பாடல்களைப் பாடுவர். கிருஷ்ணர் கோவிலை அலங்கரித்து சிறப்பு அலங்காரங்கள் செய்து கீர்த்தனைகளைப் பாடி பரவசமூட்டுவர்.பல பக்தர்கள் ஒன்று சேர்ந்து பக்தி பயமான பஜனைகளை நடத்தும்போது நம்மையே அந்த பாடல்கள் ஈர்க்கும் விதமாக இருப்பதோடு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

வங்காளம்

வங்காளத்தில்இத்தினம் விடுமுறைநாளாகும். அங்கும் இப்பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைவரின் துன்பங்களை விலக்க சந்தோஷத்துடன் கிருஷ்ண ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடுவோம்.தமிழகத்திலும் நாளை  அரசு விடுமுறை நாளாக  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News