இந்து கலாசாரம், பண்பாடுகள் : அறிவியலும் ஆன்மிகமும் இணைந்தது..!
நமது தமிழ் கலாசாரம், மற்றும் வழிபாட்டு முறைகளை கூர்ந்து கவனித்து பாருங்கள்... பல ஆச்சர்யங்கள் புரியும்.;
பொது ஆண்டு வருதற்கு முன்பு அதாவது உலகளாவிய ஒரு காலண்டர் வருவதற்கு முன்பு இங்கே ஹிந்துக்கள் கடைபிடித்தது ஹிந்துக்களின் நாட்காட்டியைத்தான் அதைப் பஞ்சாங்கம் என்றும் கூறலாம்.
அதில், ஒவ்வொரு தினமும் ஒன்பது கிரகங்களின் சஞ்சாரங்களையும், 27 நக்ஷத்திரங்களாகவும், 12 ராசிகளாகவும், திதிகளாகளாகவும், ஹோரைகளாகவும், சூரிய உதயம் முதல் அஸ்தமணம் வரைத் துல்லியாமாகக் கணித்து வைத்தான் தமிழன்.
தமிழ் வருடங்கள் 60 என்று ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பெயர் கொடுத்து பிரபஞ்சத்தில் கோள்களின் இயக்கங்களை அதன் கதிர்வீச்சுகளைத் துல்லியமாகக் கணித்து அதன் விளைவுகள் எப்படி ஒவ்வொரு உயிர்களின் மீதும் எதிரொலிக்கிறது என்பதை எளிதாக ஜாதகம் என்றும் வகுத்து வைத்தான் தமிழன்.
நவகிரஹங்களையும் அதற்குறிய கதிர்வீச்சின் நிறம் கொண்டு ஒவ்வொரு கோயில்களிலும் பிரதிஷ்டை செய்து அதற்குறிய மந்திரங்களைக் கூறி வழிபட்டான் தமிழன். இன்று இடையில் மதம் மாற்ற வந்த வெள்ளையர் கூட்டம் நமது உயர்ந்த, சக்திவாய்ந்த வழிபாட்டு முறைகள், சித்தர்கள் அருளிய பஞ்சாங்கம், ஜோதிடம் போன்ற பொக்கிஷங்களை அழிக்க நினைத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள்.
உண்மையில் ஹிந்துக்கள் பஞ்சாங்கப்படிதான் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் திதி கொடுப்பார்கள். ராமன் பிறந்த தமிழ் மாதத்தில் வரும் முதலில் வரும் நவமியை ராமநவமி என்றும், கிருஷ்ணன் பிறந்த தமிழ் மாதத்தில் வரும் அஷ்டமியை கிருஷ்ணாஷ்டமி என்றும் கொண்டாடுவார்கள். அதேதான் ஹிந்து தமிழ் மன்னன் ராஜராஜன் பிறந்த ஐப்பசி சதயத்தை ராஜராஜன் ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம்.
ஆனால் இவற்றையெல்லாம் மிக எளிதாக ஆரியத்திணிப்பு, பார்ப்பணர் திணிப்பு என்று கூறிக் கடந்து விடுகிறார்கள். விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறிய இந்த முகநூல் காலத்திலேயே நம்மால் எதையும் யார் மனதிலும் திணிக்க முடியாதென்ற பொழுது எப்படி எங்கிருந்தோ பார்ப்பணர்களால் இவ்வளவு விஷயங்களைத் திணிக்க முடிந்திருக்கும். இத்தனை வீரம் மிகுந்த மன்னர்களை ஏமாற்றி இத்தனை கோயில்கள் கட்டியிருக்க முடியும். அதுவும் எதற்காக கோயில்களைக் கட்டி வைத்தனர். அங்கு எவ்வளவு வழிபாட்டு நடைமுறைகளை அறிவியலை புகுத்தி வைத்திருந்தனர். அந்த உண்மைகள் யாருகு்கும் புரியவில்லை.
உடனே மொழியைப் பிரச்சினையாகக் கொண்டு வருவார்கள். 60 மாதங்களுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் தமிழ் அல்ல சமஸ்கிருதம் அதை எப்படி தமிழன் ஏற்றுக்கொள்ள முடியும். தமிழ் எங்கள் வாழ்வியல் மொழி, சமஸ்கிருதம் எங்கள் வழிபாட்டு மொழி, ஈசன் உடுக்கையின் இருபுறங்களிலிருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும். தமிழும் சமஸ்கிருதமும் இரண்டறக் கலந்தது தான் ஹிந்துக்களின் மொழி மக்களே.
தமிழ் மாதங்கள் 60 அதைத்தான் தமிழ்க் கடவுள் சுவாமிமலை முருகனின் 60 படிகளுக்கும் பெயர்களாக வைத்துள்ளனர் நமது முன்னோர். மீண்டும் கூறுகிறேன் நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. தமிழுக்கும், இந்து மதத்திற்கும் எதிரான கருத்துக்களை புறக்கணித்து, நமது பண்டைய பாரம்பரிய வழக்கங்களை கடைபிடியுங்கள்...
நன்றி: ந.முத்துராமலிங்கம்