Gowri Nalla Neram Means-கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?

கௌரி நல்ல நேரம் என்பது ஒரு நாளை 16 முகூர்த்தமாக பிரிப்பதாகும். அதாவது பகல் பொழுதிற்கு 8 முகூர்த்தமும், இரவு பொழுதிற்கு 8 முகூர்த்தமும் என 16 முகூர்த்தங்களை கொண்டதாகும்.;

Update: 2023-12-22 12:53 GMT

gowri nalla neram means-கௌரி நல்ல நேரம் என்பது என்ன?(கோப்பு படம்)

Gowri Nalla Neram Means

நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள்!" என்று ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. அந்த அளவிற்கு நாள் முக்கியம் என்றால், அந்த நாளில் வரும் நல்ல நேரம் என்னும் கால அளவு அதை விட முக்கியத்துவம் வாய்ந்தது. நல்ல நாளில், நல்ல நேரம் பார்த்து செய்யக் கூடிய செயல்கள் நிச்சயம் பெரும்பாலும் வெற்றி பெறும்.

Gowri Nalla Neram Means

நல்ல நேரம் என்றால் என்ன?

ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு அதிகமாக கிடைக்கும். அந்த நேரத்தை முன்பே கணக்கிட்டு கொடுத்து இருப்பார்கள். அது காலை, மாலை என இருவேளைகளில் வரும். அந்த நேரத்தில் தீய கிரகங்களின் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் குறைந்து இருக்கும். இதுவே நல்ல நேரம் ஆகும்.

இதில் கௌரி பஞ்சாங்கம் அல்லது கௌரி நல்ல நேரம் என்பது ஆதி காலத்தில் இருந்த முறை. அதாவது கிருத யுகத்தில் இருந்தே அது இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதாவது பாற்கடலை கடையும் முன்பிருந்தே கௌரி பஞ்சாங்கம் இருக்கிறது.

Gowri Nalla Neram Means


இராகு காலம், எம கண்டம் வந்த காரணம்?

பாற்கடலை கடைந்த சமயத்தில் இராகு என்னும் அரக்கன் திருமாலின் அவதாரமான மோகினியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு தேவர்கள் போல வேடமிட்டு திருட்டுத்தனமாக அமிர்தம் பருகி விடுகிறான். இதனால் கோபமடைந்த திருமால் சுதர்சன சக்கரத்தை கொண்டு அவன் தலையை கொய்ய, அமிர்தம் உண்ட இராகுவின் தலை மற்றும் உடல் இரண்டாகப் பிரிந்து இராகு - கேதுக்கள் ஆகின்றன. இவர்கள் தவம் செய்து கிரக பதவியையும் அடைந்து விடுகின்றனர்.

இந்த சமயத்தில் தான் காலக் கணிதத்தில் ஒரு குழப்பம் வருகிறது. சூரியன் முதல் சனி வரையிலான முக்கியமான ஏழு கிரகங்களுக்கு நாட்களை பிரித்து கொடுத்து விட்ட நிலையில், இராகு- கேதுவிற்கு எதை கொடுப்பது?

இறுதியாக சிவபெருமான் ஒவ்வொருவர் நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இராகு, கேதுக்களுக்கு தர உத்தரவிடுகிறார். அந்த நேரத்தில், அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இராகு- கேதுக்கள் வலிமையுடன் செயல்படுவார்கள். அதுவே இராகு காலம், எம கண்டம் எனப் பெயர் பெற்றது.

Gowri Nalla Neram Means

அப்படியானால் மக்களுக்கு எந்த நேரத்தில் நன்மை நடக்கும்? மக்களுக்கு நல்லது செய்ய உகந்த நேரம் எது? என்று கேள்விக்கெல்லாம் விடையாக வந்தது தான் கௌரி நல்ல நேரம்.

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?

கெளரி நல்ல நேரம்

கௌரி நல்ல நேரம் என்பது கௌரி பஞ்சாங்கத்தில் பிரிக்கப்பட்டுள்ள நல்ல நேரம் ஆகும். ஒரு நாளை 16 முகூர்த்தங்களாக பிரித்தால் பகல் பொழுதிற்கு 8 முகூர்த்தமும், இரவு பொழுதிற்கு 8 முகூர்த்தமும் என 16 முகூர்த்தங்களும் வரும். ஒரு முகூர்த்த நேரம் என்பது 1.30 மணி நேரமாகும்.

Gowri Nalla Neram Means

உத்தி, அமிர்தம், ரோகம், லாபம், தனம், சுகம், விஷம், சோரம் என்று எட்டு வகையான முகூர்த்தம் கௌரி பஞ்சாங்கத்தில் இருக்கின்றன.

இதில், அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்தி என்ற வேளைகளில் சுபகாரியங்களை செய்யலாம். எனினும், இதிலும் கூட ஒரு விதி விலக்கு உண்டு. அதன்படி கௌரி பஞ்சாங்க அட்டவணை நேரத்தில் சுப நேரம் என்று இருக்கிறது. ஆனால், அந்த சமயத்தில் ராகு காலம், எம கண்டம், குளிகை காலம் போன்றவை வந்தால் அது கௌரி பஞ்சாங்கத்தில் நல்ல வேளைகள் என்று போட்டு இருந்தாலும் கூட அவசியம் அந்த நேரங்களை தவிர்த்து விடுங்கள்.

Tags:    

Similar News