தமிழகத்தில் மும்முனைப் போட்டி ஜெயிக்கப் போவது யாரு?...படிங்க....
Three-Way Competition In Tamil Nadu... லோக்சபா தேர்தலில் தமிழகத்தினைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ என மும்முனைப் போட்டிகள் நிலவப் போகிறது. யாருக்கு அதிக ஓட்டு விழும்... மக்கள் கையில் உள்ளதுங்கோ......
Three-Way Competition In Tamil Nadu...
இந்தியாவின் 18 வது லோக்சபாவுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது. அறிவித்த நாள் முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் தேர்தல் என்றாலே பரபரக்கும் தமிழகத்தில் இந்த தேர்தலைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக தொடரப்போவதாக தெரிகிறது. திமுக கூட்டணியை உறுதி செய்து விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிரசாரத்தை துவக்கும் நிலையில் உள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளான மதிமுக, இரண்டு கம்யூனி்ஸ்ட் கட்சிகள் , மற்றும் கொமதே க , உள்ளிட்டவைகள் தங்களுடைய அதிகாரபூர்வ வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. விசிக , திமுக ,காங்கிரஸ் மட்டுமே அறிவிக்க வேண்டும். அதுவும் இரண்டொரு நாளில் அறிவிக்கப்பட்டுவிடும்.
Three-Way Competition In Tamil Nadu...
ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வைப் பொறுத்தவரை இந்த நிமிடம் வரை கூட்டணியில்எ ந்த ஒரு பெரிய கட்சியையும் சேர்க்காமல் தனித்தே உள்ளது. பாமக இப்ப வந்துவிடும்...அப்ப வந்துவிடும் என சொல்லிக்கொண்டிருக்கும் போதே திடீரென பாஜ பக்கம் சாய்ந்துவிட்டது. மறைந்த நடிகர் விஜயகாந்தின் கட்சியான தேமுதிகவாவது அதிமுக பக்கம் சாயுமா? அல்லது அதுவும் பாஜ பக்கம் போய்விடுமா? என்று இப்போது வரை ஒரு முடிவும் தெரியவில்லை. அந்த வகையில் பாஜவில் தற்போது ஸ்ட்ராங்கான கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்துகொண்டிருக்கின்றன.
அதாவது பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி எனஓரளவுக்கு ஓட்டு வங்கி உள்ள கட்சிகள் இணைந்துள்ளது பாஜவுக்கு தனி பலத்தைத் தரும் வகையில் உள்ளது. எந்த ஒரு பெரிய கட்சியையும் தன்னுடன் சேர்க்காத நிலையில் அதிமுக களம் இறங்கினால் ஓட்டு விழுமா? என்பது சந்தேகமே...காரணம் அந்த கட்சியே இரு பிரிவாக உள்ளது. அதே நேரத்தில் திமுகவை சரியாக போட்டியாக அதிமுக இன்று வரை எதிர்க்காமல் மவுனம் சாதிப்பதால் ஓட்டுவிழுமா?.
திமுக கூட்டணியானது பலம் பொருந்தியதாக தொடர்ந்து வருகிறது. மதவாதத்தை எதிர்க்கும் கூட்டணியாக விளங்குவதோடு எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கணகச்சிதமாக தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு தேவையான தொகுதிகளைக் கொடுத்து சரிக்கட்டிவிட்டது. ஆகையால் இந்த கூட்டணிதான் வெற்றி வாகை சூடும் என தனியார் டிவி சேனலின் கருத்துக் கணிப்பும் தெரிவித்துள்ளது.
திமுகவின் பெரிய பலமே மகளிர் உரிமைத்தொகையும், இலவச பஸ் பயணமும்தான். பெண்களைக் கவரும் வகையில் பிரதானமாக இந்த இரண்டு திட்டங்களும் திமுகவுக்கு தேவையான சாதகமான ஓட்டுகளை வழங்கும். அதுவும் பெண்களைக் குறிவைத்தே திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதால் திமுகவிற்கு பலம் அதிகம் என்று கூட சொல்லலாம்.
அதே நேரத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகம் வரட்டும்... மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் ஒருபுறம் பேசி வருகிறார். ஒருசில விஷயங்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தாலும் ஆனால் ஓட்டு என வரும்போது அதனைக் கண்டுகொள்ளாமல் திமுகவுக்கு போட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Three-Way Competition In Tamil Nadu...
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும்நிர்வாகிகள். (கோப்பு படம்)
பாஜ தனித்து களம் இறங்கும் பட்சத்தில் எத்தனை தொகுதிகளைக் கவரும் என்ற கணக்கே தெரியலை. அண்ணாமலை தலைவராக இருப்பதால் மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளதால் பாஜ வானது தமிழகத்தில் இந்த தேர்தலில்தான் புதிய உற்சாகத்தினைத் தோற்றுவித்து வருகிறது.
உண்மையில் சொல்லப்போனால் தேசிய கட்சிகள் இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்களில் முழுமையான வாக்குகளைப் பெற்றதில்லை. மாநில பிரதான கட்சிகளோடு சவாரி செய்துதான் பெற்றிருக்கிறது இதுதான் வரலாறு. ஆனால் தற்போது பாஜ தனித்து களம் இறங்குவதால் தமிழகத்தில் பாஜவின் பலம் நிரூபணம் ஆகும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறது?கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை எத்தனை தொகுதிகளை வழங்க உள்ளது, என்பது பற்றிய விபரம் இன்று வரை வெளியிடப்படவில்லை.
தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் இதுபோல் நாட்களைக் கழித்துக்கொண்டு செல்வதால் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் போய்விடுமா? என்று சந்தேகமாக உள்ளது.காரணம் ஒரு லோக்சபா தொகுதிக்கு 6 சட்டசபை தொகுதிகள் உண்டு. இந்த 6 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தினை வேட்பாளர் மேற்கொண்டால்தான் மக்கள் மனதில்நிற்பார். வேட்பாளர் அறிவிப்பே தாமதமானால் எப்படி வாக்கு விழும்,
தமிழக ஜாம்பாவான்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா இருந்த போது தேசியக் கட்சிகள் அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு கொடுத்த சீட்டுகளை வாங்கிச் சென்றன. ஆனால் தற்போது அந்த 3 பேரும் இல்லாத நிலையில்ஸ்டாலின் மட்டுமே கரெக்டாக காய் நகர்த்தியுள்ளார். எந்த பிரச்னைகளும் இல்லாமல்... அதிமுக தடுமாறிக்கொண்டிருக்கிறது. பாஜவும் என்ன செய்வது என்று தெரியாமல் போன திசையில் போய்க்கொண்டிருக்கிறது. இதுபோல் இழுபறிகள் எல்லாமே வலுவான திமுக கூட்டணிக்கு தான் சாதகமாக அமையுமே தவிர இவர்களுக்கு அமையுமா? என்பது வாக்காளர்களின் கையில் வைக்கும் மையில் உள்ளது...என்ன நான் சொல்றது கரெக்டாங்க.... யோசியுங்க... வேட்பாளர் தேர்வில்....ஓட்டுபோடும்போது... யோசிச்சு போடுங்க....