வந்துட்டாரய்யா....வந்துட்டாரு..... நடிகர் வடிவேல் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போறாரா?.....

Actor Vadivel Election Campaign To Dmk தமிழக அரசியலைப் பொறுத்தவரை அக்காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்ததால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களப்பணியாற்றிய நடிகர், நடிகைகள் ஏராளம்.ஆனால் இன்று?.....

Update: 2024-03-18 09:08 GMT

கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் களப்பிரச்சாரம் செய்த வடிவேலு (கோப்பு படம்)

Actor Vadivel Election Campaign To Dmk

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இன்னும் ஒரு மாத கால அவகாசமே இருப்பதால் கட்சிகள் அனைத்தும் பிரசாரக்களத்தில் முழு வீச்சில் முனைப்பு காட்டி வருகிறது.அதிமுக , பாஜ ஆகியவற்றில் ஒரு சில நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால்  பிரசார களத்திற்கு தயாராகி வருவதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் திமுகவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் யார்? யார்? என அக்கட்சி தலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Actor Vadivel Election Campaign To Dmk


மாமன்னன் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த காமெடி புயல் வடிவேலு (கோப்பு படம்)

தமிழகத்தினைப் பொறுத்தவரை கூட்டணிகளில் நிரந்தரமாக இடம் பெற்றவர்களுக்கு தேவையான தொகுதிகளையும் திமுக வழங்கி விட்டதோடு திமுக போட்டியிடும் 21 தொகுதிகளையும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலுவை பிரசாரத்திற்கு களம் இறங்க தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வந்துட்டாரய்யா ...வந்துட்டாரு..கிளம்பிட்டாரய்யா... கிளம்பிட்டாரு...என வடிவேலுவின் பஞ்ச் டயலாக் இனி தேர்தல் பிரசாரத்தில் ஒலிக்க வெகு நாட்களே உள்ளது பாருங்க...

தமிழகத்தினைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதோடு பாண்டியின் 1 தொகுதியில் வென்று நாற்பதுக்கு நாற்பது வெற்றிக்கனியைப் பறித்தே ஆகவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு சூளுரைத்துள்ளார்.

அதன்படி தனது கூட்டணி கட்சிகளுக்கு தேவையான தொகுதிகளையும் இன்றளவில் ஒதுக்கீடு செய்துவிட்டு தனது வேட்பாளர் பட்டியலை திமுக அறிவிக்க முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் எதிரணிகளாக பாஜ அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் இன்று வரை கூட்டணியே இன்னும் அமைந்த பாடில்லை. எப்படிப் பார்த்தாலும் திமுகவின் பலம் அப்படியே உள்ளது. யாரும்பிரிந்து செல்லாததால் வலுவான கூட்டணியாக களமிறங்குகிறது.

Actor Vadivel Election Campaign To Dmk


மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நினைவிடத்திறப்பு விழாவிற்கு பிறகு அங்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் வடிவேலு  (கோப்பு படம்)

கடந்த 2011 ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் கருணாநிதி இருந்த போது திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய களம்இறங்கிய காமெடி நடிகர் வடிவேலுவுக்கு விழுந்த அடியில் 10 வருடங்களாக பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். தற்போது நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள நடிகர் வடிவேலுவை தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்க திமுக தலைமை முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.

2011 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் தேர்தல் முடிவில் திமுக தோல்வியுற்று அதிமுக வெற்றி பெற்றதால் படவாய்ப்புகளை இழந்ததோடு 10 ஆண்டு காலமாக அரசியல் பக்கமும் வராமல் ஒதுங்கியே இருந்தார் நடிகர் வடிவேலு.

தற்போது நடப்பது திமுக ஆட்சி என்பதால் மீண்டும் அவர் மனதில் அரசியல் ஆசை வந்துவிட்டது போல் தெரிகிறது. மாமன்னன் படத்தில் அமைச்சர் உதயநிதியோடு நடித்ததால் மேலும் நெருக்கம் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம்.

பட வாய்ப்புகளை இழந்தபோதும் அரசியல் பக்கம் வராமல் இருந்த வடிவேலுவுக்கு மீண்டும் அரசியல் பிரசாரம் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திமுகவுடன் அவரது உறவு புதுப்பிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று சுற்றிப் பார்த்த அவர் இது சமாதி அல்ல சன்னிதி என புகழ்ந்து பேசியுள்ளார். கருணாதியின் தீவிர அபிமானி நான் என்றார்.

அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அமைக்கப்பட்ட அவரது வரலாற்று போட்டோ கண்காட்சியைத் வடிவேலு பார்வையிட்டார். சென்னையில் நடந்த விழா மேடையில் பங்கேற்றும் பேசினார்.

தேர்தல் பிரசாரத்திற்கு சினிமா நடிகர்கள் அதிமுகவில் அதிகம். ஆனால்திமுகவைப் பொறுத்தவரை அந்த அளவிற்கு இல்லை. எனவே திமுகவி்லும் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என அமைச்சர் உதயநிதி விரும்புவதாக சொல்லப்படுகிறது.

சமத்துவ மக்கள் கட்சியை பாஜவோடுஇணைத்துவிட்ட நிம்மதியில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா ஆகியோர் தற்போது பாஜவுக்கு ஆதரவாக பிரசாரத்தினைத் துவக்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுகவைப் பொறுத்தவரை காயத்ரி ரகுராம், நடிகை கவுதமி ஆகியோர் களமிறங்குவார்கள். ஆனால் திமுகவில் அவர்களுக்கு போட்டியாக வடிவேலுவை தமிழகம் முழுக்க பிரசாரத்துக்கு அனுப்ப திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன... வந்துட்டாரய்யா வந்துட்டாரு...

தமிழக அரசியலைப் பொறுத்தவரை அக்காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்ததால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களப்பணியாற்றிய நடிகர், நடிகைகள் ஏராளம். ஆனால் இன்றைய அரசியலில் அவர்களுடைய காலத்துக்கு பிறகு அந்த அளவுக்கான எதிர்பார்ப்பு நட்சத்திர பட்டாளம் தாமாக முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்தால் போதும்

Tags:    

Similar News