Thalappakatti biriyani recipe in tamil-சுவையான தலப்பாகட்டி மட்டன் பிரியாணி செய்யணுமா?
பிரியாணி என்றதுமே பலருக்கு மூக்கில் வியர்த்துவிடும். ஞாயிறு விடிகிறதோ இல்லையோ பிரியாணி வந்துடனும்.
Thalappakatti biriyani recipe in tamil
பிரியாணி என்று சொன்னாலே நாவூறும் பிரியாணி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பாய் வீட்டு பிரியாணி என்றால் அதற்கென்று ஒரு தனி பிரியர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சிறந்த பிரியாணி வகைகளில் ஒன்றுதான் தலப்பாகட்டி பிரியாணி. அதை நாமளே வீட்டில் செய்து பார்த்தால் என்ன என்று நினைப்பவர்களுக்கு இதோ வழிகாட்டுகிறோம்.
Thalappakatti biriyani recipe in tamil
ஜோரா ஒருமுறை கைத்தட்டி ஆராவாரம் செய்து உள்ளே வாங்க. பிரியாணி செய்வதற்கு முன்னரே மனைவியை செய்யவிடாமல் 'எப்போ ரெடியாகும்? எப்போ ரெடியாகும்' என்று கணவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அதேபோல பிள்ளைகளுக்கும் அதே ரூல்ஸுதான். அமைதியா செய்து முடிக்கும் வரை கம்முனு கிடக்கணும். ஓகேவா..?
'என்ன சமையலோ..?' என்று தூரப்போய் நின்று பாட்டு பாடிக்கொள்ள அனுமதி உண்டு. சரி சரி இப்போ தலப்பாகட்டி பிரியாணிக்கு வருவோம்.( யோ..சொல்லிகிட்டே இருக்காம வேலையைத் தொடங்குய்யா என்று திட்டுவது தெரிகிறது? நானே ஆரம்பிச்சிடுறேன்.
தலப்பாகட்டி மட்டன் பிரியாணி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க.( யோவ் ஏற்கனவே வந்தாச்சு?)
உங்கள் நாவுக்கு சுவையைத் தூண்டும் ருசிமிகுந்த தலப்பாகட்டி மட்டன் பிரியாணி சமையல் குறிப்புகள். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தலப்பாகட்டி மட்டன் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க.
Thalappakatti biriyani recipe in tamil
சமைக்கத் தேவையான பொருட்கள் ( அரை கிலோவுக்கானது)
நெய் – 3 டீஸ்பூன்
டால்டா – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/4 கப்,
ஏலக்காய் – 2,
தயிர் – 1 கப்,
எலுமிச்சம் பழம் – 1/2 மூடி,
கிராம்பு – 2,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பட்டை – சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
மட்டன் – 1/2 கிலோ,
மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி,
Thalappakatti biriyani recipe in tamil
செய்முறை : தலப்பா கட்டு மட்டன் பிரியாணி
Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
Step 2.
பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும் .
Step 3.
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் , மட்டன் சேர்த்து வதக்கவும் .நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
Step 4.
.தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும். அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்
Thalappakatti biriyani recipe in tamil
இதோ வாசனையுடன் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி ரெடியாகிடிச்சி. பக்கத்து வீட்டு பாமா அக்கா வந்து, 'என்னடி ஹேமா வாசனை தூக்குது? என்னடி செஞ்ச?' என்று கேட்டால் அவங்களுக்கும் சொல்லிக்குடுங்க.
இதில் தாளித்து முறையாக கைப்பக்குவத்துடன் செய்தால் சூப்பரா...இருக்கும்ங்க. கைப்பக்குவம் முக்கியம் இல்லீங்களா? இப்போ உங்க கணவர் மற்றும் பிள்ளைங்களை அழைத்து மூக்குமுட்ட சாப்பிடச் சொல்லுங்க. (சொல்லிக்கொடுத்த என்னை சாப்பாட்டுக்கு அழைக்காததில் வருத்தம் இருக்கத்தான் செய்யிது)