Kadi jokes riddles in tamil-டேய், இந்த கடியா..கடிப்ப..? தாங்கமுடியலை..!
மனதில் மகிழ்ச்சி இல்லையென்றால் வாழ்க்கை நரகமாகும். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தராது. அதையும் தாண்டி 'நகை'மிகு 'சுவை'மிகு வாழ்வும் வேண்டும்.;
Kadi jokes riddles in tamil-கடி ஜோக்ஸ் (கோப்பு படம்)
Kadi jokes riddles in tamil
மனிதனுக்கு மகிழ்ச்சி என்பது அவசியம். மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை சிறக்காது. ஆமாம். சிரிக்காம இருந்தா, சமூத்தில் மட்டுமில்லை, நம்ம உடம்பே நம்மளை மதிக்காது. அட, ஆமாங்க. மகிழ்ச்சியோடு சிரிச்சி வாழ்ந்தா நோய்நொடிகள் வராது. அதனாலதான் நமது முன்னோர்கள் வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப்போகும் என்று சொன்னாங்க.
மத்தவங்களை அழுக வைக்கிறது ரொம்ப சுலபம். ஏன்னா ஏதாவது ஒரு கெட்டதை செஞ்சி, மத்தவங்க கண்ணீர் விடறதைப்பார்த்து நாம சிரிக்கிறது. அது மனிஷத்தனமும் இல்லை. ஆனால் பிறரை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனாலும் பல சிறந்த நடிகர்கள் நம்மளை சிரிக்க வச்சி இருக்காங்க.
Kadi jokes riddles in tamil
இப்போ நாமளும் சிரிப்போமா?
தம்பி தீக்குச்சியை பத்த வெச்சு ஏன் இட்லி மேல வைச்சு பார்க்கிற?
நீங்க தானே இட்லி "பஞ்சு" மாதிரி இருக்குன்னு சொன்னீங்க! அதான் தீப்பிடிக்குதானு பார்த்தேன்!
'பாடத்தைக் கவனிக்காமல் இருந்ததால உன்ன டீச்சர் அடிச்சாங்களே, அதை ஞாபகம் வச்சிருக்கியா? நான் அதை "அடி"யோடு மறந்துட்டேன்.
வரலாறு ஏன்டா உனக்கு பிடிக்காதுன்னு சொல்ற?
சார் நான் "விஜய்"யோட ரசிகன்!
வெண்ண வியாபாரி லெட்டர் எப்படி எழுதுவாரு?
"உருகி, உருகி" எழுதுவாரு!
கணக்குப் பரீட்சையில, கணக்குப் போடாமல் எதுக்குடா டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்க?
நீங்கதான் சார் சொன்னீங்க "ஸ்டெப்ஸ்" க்கு மார்க் உண்டுன்னு.
என் ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு டாக்டர்!
சுமார் எத்தனை "வீக்"கா அப்படி இருக்கு?
நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லு
பனியன்
திருவள்ளுவர் ஒரு மிமிக்கிரி ஆர்டிஸ்ட்னு எப்படி சொல்ற?
1330 குரளு(ல்)க்கு சொந்தக்காரர் ஆச்சே! அதான்
குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா?
Kadi jokes riddles in tamil
என் உடம்புல இரும்புச்சத்து இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு.
அதனால தான் "துரும்பா" இளைச்சு போயிட்டியா?
பாட்டி! நான் ஓட்டப் பந்தயத்திற்கு போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.
நல்லா "மெதுவா" பார்த்து ஓடிட்டு வா கண்ணு!
கண் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால சூரியனை வணங்க சொல்றீங்களே! ஏன் டாக்டர்?
"கண்"கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது இல்ல! அதுக்கு தான்!
டானிக் சாப்பிடும்போது ரூம் கதவை மூடி கிட்டு ஏன் சாப்பிடுற?
டாக்டர் தான் அரை(றை) மூடி சாப்பிட சொன்னாரு.
ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு?
அது ராமனோட கஷ்டகாலம் சார்
நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க?
"எண்ணெய்" சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு
Kadi jokes riddles in tamil
உனக்கு காற்று அடிக்கும் போது கூட வியர்க்குமா! எப்படி?
நான் சைக்கிளுக்கு காற்று அடிக்கும்போது வியர்த்துடிச்சு
எதுக்காக ஸ்கேல பக்கத்துல வச்சிக்கிட்டு சாப்பிடறாரு?
டாக்டர், அவரை அளவோட சாப்பிட சொல்லி இருக்கிறாராம்.
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?
எங்க அம்மாவுக்கு "வேகமா" படிக்க வராது. அதான்!
அந்தப் பையனை எங்க கூட்டிட்டு போறீங்க?
சாணம் பிடிக்கிற கடைக்கு.
அவன் புத்தி ரொம்ப "மழுங்கி"ப் போச்சாம்.
Kadi jokes riddles in tamil
பாய், தலையணை வியாபாரம் ஆரம்பிச்சீங்கலே! எப்படி இருக்கு?
சுத்தமா "படுத்துடுச்சு".
டாக்டரிடம், நான் டெய்லர் வேலை பார்க்கிறதா சொல்லி இருக்கக் கூடாது!
ஏன்? என்னாச்சு? என்னோட பையனுக்கு ஆபரேஷன் முடிஞ்சதும், நீங்களே “தையல்”‘ போட்டுக்கோங்கனு சொல்லிட்டாரு.
50 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க!
“அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!
ஏன்டா மணி! பரீட்சையில் எல்லா பாடத்திலேயும் கம்மியா மார்க் எடுத்து இருக்க?
நீ தான அப்பா எல்லாத்துலையும் சிக்கனத்தை கடைபிடிக்கனும்னு சொன்ன. அதான் மா.
என்னப்பா எக்ஸாமுக்கு பிளம்பரோட வந்திருக்க?
கொஸ்டின் பேப்பர் "லீக்" ஆவதுனு சொன்னாங்க சார் அதான்.
என்னடா வாயிலையும், கால்லையும் காயம்
"வாய்க்கால்"ல விழுந்துட்டேன்.
அந்த மிளகாய் வியாபாரி மட்டும் ஏன் மழையில் நனையல?
ஏன்னா அவர் விற்பது குடை மிளகாய்
Kadi jokes riddles in tamil
மகாத்மா காந்திக்கு பிடித்த கிரகம் எது தெரியுமா?
சத்தியா"கிரகம்" தான்.
நேத்து சபாபதி கச்சேரி எப்படி இருந்தது?
கச்சேரி ஆரம்பிச்சதும் "சபா பாதி"யா ஆயிடுச்சு.
அவர் எந்த நேரமும் எல்லோரையும் திட்டிகிட்டே இருக்காரு. ஏன்?
அட அவரு தாங்க "திட்ட" அலுவலர்
வெளியில மழை பெஞ்சா நீ ஏன் கையில் தாயத்து கட்டி இருக்க?
"பேய்" மழையா இருக்கே அதான்.
டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும்.
நான் பனியில நிக்கல டா! காலில் தான் நிற்கிறேன்.
நான் நாளை வெளியூர் செல்கிறேன். இது என்ன காலம்?
இது எங்களுக்கு நல்ல காலம், சார்!
எதிரி நாட்டு அரசனை எப்படி பின்வாங்கச் செய்தீர்கள்?
குறவன், குறத்தியை அனுப்பி தான் "பின்" வாங்க வெச்சோம்.
Kadi jokes riddles in tamil
“டாக்டர், என் மகன், சாமி டாலரை முழுங்கிட்டான். எப்படியாச்சும் எடுத்து விடுங்களேன்”
இப்போ டாலருக்கு மதிப்பு ரொம்ப கொறஞ்சிடுச்சி எங்க இருந்து எடுத்தாலும் நஷ்டம்தான். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நிலைமை சரியானதுக்கு அப்புறம் எடுத்துக்கலாம், லாபம் அதிகமாக கிடைக்கும்.
நீ வாழைப்பழம் திருடுறதை உங்க அப்பா பார்த்துட்டாரே. அப்புறம் என்ன செஞ்சாரு?
வீட்டுக்கு வந்து “தோலை” உரிச்சிட்டாரு.
எதுக்குமா குழந்தைக்கு சாப்பாட்டில் ஷாம்பூவை கலந்து கொடுத்த?
ஷாம்பூல புரோட்டின் அதிகம் இருக்கிறதா டி.வி விளம்பரத்தில சொன்னாங்க, டாக்டர். அதனால கொடுத்தேன்.
Kadi jokes riddles in tamil
பில்கேட்ஸ் கிட்ட போய் உட்கார் என்று சொன்னா, அவர் உட்கார மாட்டாரு! ஏன் தெரியுமா?
தெரியலையே!
ஏன்னா, அவருக்கு தமிழ் தெரியாதுல்ல.
புத்தி இல்லாமல் வியாபாரம் செஞ்சதால வியாபாரத்துல லாபம் கிடைக்கல அப்படி என்ன வியாபாரம் செஞ்ச? எனக்கு கை கொஞ்சம் நீளம்னு உனக்கே தெரியும். ஆனாலும் புத்தி இல்லாம “பூ வியாபாரம்” செஞ்சு தொலைச்சிட்டேன்.
பாம்பிற்கும், ஷாம்பிற்கும் என்ன வித்தியாசம்?
“ஷாம்புவ நம்ம போட்டா தலையில் நுரை வரும்.
பாம்பு நம்பள போட்டா வாயில நுரை வரும்.
” மன்னா.. நம் இளவரசருக்கு புலிகேசி என்று பெயர் வைத்தது பற்றி மக்கள் கிண்டல் பண்ணுகிறார்கள்.
உண்மையாகவா?
ஆம் மன்னா.எலிக்கு பிறந்தது புலியாகுமா என கேட்கிறார்கள் மன்னா?
மொக்க ஜோக்: எதுக்கு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுகிட்டு மேலேயே பார்த்துகிட்டு இருக்க?
மதுரை பஸ் நாலு மணிக்கு “மேல” வரும்னு சொன்னாங்க, அதுதான்.