முறையாக பழைய சாதம் செய்வது எப்படி?
Palaya Soru Benefits in Tamil-பழைய சாதமும், அதன் நீரும் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் இல்லாமலும், உடலுக்கு எவ்வித வியாதிகளும் வராமல் இருக்கும்;
Palaya Soru Benefits in Tamil-1925ல், வெளிவந்த ஸ்ரீபரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர். எழுதிய 'ஜீவப்பிரம்மைக்ய வேதாந்த ரகஸ்யம்' என்று புத்தகத்தில் 'அன்னரச அமிர்த சஞ்சீவி' பற்றி கூறப்பட்டுள்ளது. அது வேறொன்றும் இல்ல... பழைய சோற்றுக்குத் தான் அந்த பெயர்.
பழைய சாதமும், அதன் நீரும் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் இல்லாமலும், உடலுக்கு எவ்வித வியாதிகளும் வராமல் எப்போதும் சுகமாயிருப்பர்ன்னு அந்த புத்தகத்திலே எழுதப்பட்டுள்ளது. பழைய சோறு எப்படி தயார் செய்வது என்ற விபரமும் அதிலே இருக்கு.
'இது என்ன பெரிய விஷயம். ராத்திரி மீதமுள்ள சோத்துல தண்ணியை ஊத்தி வச்சா மறுநாள் காலையில அதுதான் பழைய சோறு'ன்னு சொல்லத் தோணுதா? அப்படியில்லே, அதில் சில நுணுக்கம்லாம் இருக்கு.
ராத்திரியில சோறு வடிச்சதுக்கு அப்புறம், ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணியை விட்டு கொதிக்க வைக்க வேண்டும். சோறு வடித்த கஞ்சியில் மேலே படிந்துள்ள ஏட்டை எடுத்துட்டு, அந்த கஞ்சியை தேவையான அளவுக்கு எடுத்துக்கணும். ரெண்டு பங்கு கஞ்சி நீர், ஒரு பங்கு கொதித்து ஆறிய தண்ணீர், இது இரண்டையும் ஒரு பாத்திரத்துல கலந்து வச்சுக்கணும்.
ராத்திரி எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம், மீதம் உள்ள சோற்றில் இந்த தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விடுங்க, அவ்வளவு தான். காலையில எழுந்து, பல் தேய்ச்சு, குளிச்சு முடிச்சதுக்கப்புறம் சாப்பிட உட்காரும்போது, ஒரு கிண்ணத்துல சாதத்தை எடுத்துப் போட்டுக்குங்க, அதுக்கு மேல ரெண்டு அங்குல உயரத்துக்கு வர்ற மாதிரி சாதம் ஊறிய தண்ணியையும் ஊத்துங்க. கொஞ்சம் கரிக்கிற அளவுக்கு உப்பு போட்டு, தொட்டுக்கொள்ள ஊறுகாய் வச்சுக்குங்க.
சாதத்தை சாப்பிட்டு, அந்த தண்ணியையும் குடிச்சுடுங்க. மழைக்காலம், குளிர்காலம் எதைப் பத்தியும் கவலைப்படாம ஆயுள் பூராவும் இதை சாப்பிட்டுக்கிட்டே வரலாம். எந்த காலத்துலேயும் எந்த வியாதியும் அண்டாது. குழந்தைகள் முதல் பெரியவர் வரைக்கும், எல்லாரும் இதை சாப்பிடலாம். முதல் ஆறு மாசம் இப்படி சாப்பிட்டுகிட்டு வந்தாலே, அதோட பலனை உணர ஆரம்பிச்சிடுவீங்க.
இன்னொரு வைத்தியமும் உண்டு. குடல் சுத்தமாகணுமா? வேற ஒண்ணும் வேண்டாம் நீராகாரத்தை ஒரு ரெண்டரை டம்ளர் எடுத்துக்கிட்டு, கொஞ்சம் அதிகமா கரிக்கிற மாதிரி உப்பை போட்டுக்க வேண்டியது. காலையில வெறும் வயிற்றில் சாப்பிடணும். உடனே, வெற்றிலை போடுங்க. அவ்வளவு தான், வயிறு கிளீன்.
பழைய சோற்றில் தயிரோ, மோரோ விட்டு சாப்பிடப் கூடாதாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2