Benefits of Palmyra Tuber for Diabetic Patients - நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Benefits of Palmyra Tuber for Diabetic Patients - நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிட்டால் உடம்பில் இந்த 7 மாற்றங்கள் வரும். அதுபற்றி கட்டாயம் தெரிந்துக் கொள்வோம்.;

Update: 2023-12-31 09:43 GMT

Benefits of Palmyra Tuber for Diabetic Patients - பனங்கிழங்கு சாப்பிடலாமா? (கோப்பு படம்)

Benefits of Palmyra Tuber for Diabetic Patients- கிழங்கு வகைகள் என்றாலே நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரி என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளக்கூடிய கிழங்கு ஒன்று உண்டு. அதுதான் பனங்கிழங்கு. ஆம். பனங்கிழங்கை சீசன் சமயங்களில் எடுத்துக் கொள்ளும்போது நீரிழிவு நோயாளிகளின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். 

உலகம் முழுவதிலும் கிட்டதட்ட 450 மில்லியன் பேருக்கும் மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு மருந்துகளோடு சேர்த்து ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மிக முக்கியம். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளாகத் தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.


பனங்கிழங்கு

பனை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம். பனையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தவை. அதில் குளிர்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் பொருள் தான் பனங்கிழங்கு. நம்முடைய முன்னோர்கள் பனங்கிழங்கை தங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்த தலைமுறையினர் பனங்கிழங்கை கண்டுகொள்வதே இல்லை. ஆனால் நீரிழிவு தொடங்கி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் பயமில்லாமல் எடுத்துக் கொள்ளும் கிழங்கு என்றால் அது பனங்கிழங்கு என்று சொல்லலாம்.

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு

பனங்கிழங்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் மிகச்சிறந்த உணவு என்று சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சும். நார்ச்சத்க்களின் மூலம் என்றுகூட சொல்லலாம்.

பனங்கிழங்கில் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. இந்த பனங்கிழங்கை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ச்சியாக 30 நாட்கள் எடுத்துக் கொள்ளும்போது இன்சுலின் சென்சிடிவிட்டி தூண்டப்பட்டு, ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.


உடல் எடையை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு

பனங்கிழங்கில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதை டயட்டில் சேர்த்துக் கொள்ளும்போது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரி உட்கொள்வதை தடுக்கிறது. அதனால் உடல் எடையை சீராகவும் ஆரோக்கியமாகவும் குறைக்க முடியும்.

அதோடு பனங்கிழங்கில் அதிகமாக புரதங்கள் நிறைந்திருக்கின்றன. இது மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வதோடு கொழுப்பை எரிக்கும் வேலையையும் செய்யும். குறிப்பாக தசை இழப்பு இல்லாமல் கொழுப்பை மட்டும் எரிக்கும் தன்மை கொண்டது.

கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும் பனங்கிழங்கு

பனங்கிழங்கு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச்சிறப்பாக வேலை செய்யும். இந்த பனங்கிழங்கில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.

தினசரி உணவில் பனங்கிழங்கையோ அதன் பொடியையோ எடுத்துக் கொண்டு வர, ரத்தத்தில் உள்ள கிளிசரைடுகள் குறைந்து, கெட்ட கொலஸ்டிரால் குறைய ஆரம்பிக்கும்.


​ஆன்டி - இன்ஃபிளஆமட்டரி பண்புகள்

பனங்கிழங்கில் ஆன்டி .இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன. பொதுவாக நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சிரனை உள்ளவர்களுக்கு அதிகமாக உடலில் இன்ஃபிளமேஷன்கள் உண்டாகும். இந்த இன்ஃபிளமேஷன்களைக் குறைத்து உடலை உறுதியாக்கும் தன்மை பனங்கிழங்குக்கு உண்டு.

​பொட்டாசியம் நிறைந்தது

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் சோடியம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். பொட்டாசியம் சத்து அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது இதய நோய் அபாயத்தை 18 சதவீதம் வரை குறைக்கச் செய்யும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

100 கிராம் பனங்கிழங்கில் 600 மில்லிகிராம் அளவு பொட்டாசியம் கிடைக்கும். இது நம்முடைய தினசரி பொட்டாசியம் தேவையில் 15 சதவீதத்தை நிறைவு செய்யும்.

இதிலுள்ள பொட்டாசியம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு சம்பநதப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. அதனால் பனங்கிழங்கை உணவில் சேர்ப்பது மிக நல்லது.


​நரம்பு , தசை இயக்கத்தை மேம்படுத்தும்

பனங்கிழங்கில் பொட்டாசியத்தை போலவே மக்னீசியமும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான மிக முக்கியமான கனிமமாகும்.

அதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பலவீனத்தை தரும் தசை வளர்ச்சி மற்றும் நரம்பு சம்பந்ததப்பட்ட பிரச்சினைகளையும் இது சரிசெய்ய உதவி செய்யும்.

​கிளைசெமிக் குறியீடு

பனங்கிழங்கில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் கிளைசெமிக் லோடு இரண்டுமே மிகக் குறைவு. அதனாலேயே நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகச்சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

பனங்கிழங்கின் கிளைசெமிக் குறியீடு வெறும் 39 தான். இது ஒரு ஆப்பிளின் கிளைசெமிக் குறியீட்டை விடக் குறைவு தான். பசியைத் தூண்டும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவி செய்கிறது. அதோடு பனங்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மிக அதிகம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைத் தீர்க்க மிகச்சிறப்பாக உதவி செய்யும்.

Tags:    

Similar News