அன்பெனும் தேன் கலந்து வாழ்த்துகிறேன்..! எனக்கென்று நீ மட்டுமே..பிறந்தாய்..!

Birthday Kavithai in Tamil for Lover-காதல் உள்ளங்களுக்கு வாழ்த்தை பரிமாறிக்கொள்ள ஒரு கோடி வார்த்தைகள் இருந்தாலும் போதாது. புதிதாக ஒன்றைத் தேடும்.;

Update: 2025-01-07 03:30 GMT

Birthday Kavithai in Tamil for Lover-வானளாவிய அன்பின் உள்ளங்கள் பிறந்த நாளில் வாழ்த்துக்கூறுவதில் பேருவகை கொள்கின்றனர். அவனோ..அல்லது அவளோ..காதலுற்ற மனங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கூற செய்துகொள்ளும் முன்னேற்பாடுகள் அலாதியானது. எப்படி வாழ்த்துச் சொல்லவேண்டும்? எந்த ஆடை அணிவது? என்ன கலரில் ஆடை அணிவது? இந்த கலர் அவளுக்கு அல்லது அவனுக்கு பிடிக்குமா..? இப்படி மனதால் தேடி..பல நாட்கள் தூங்காமல் விழித்திருந்து சிந்தனைகள் ஓடும்..சாப்பிட முடியாது. தூங்க முடியாது. அது ஒரு இன்பமான துன்பம்.

  • என் காதல் என்ற இலக்கியத்துக்கு இலக்கணம் தந்தவளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • கத்தி ரத்தம் இன்றி என் இதயத்தை கொள்ளை அடித்த என் அன்பான கள்ளிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • வானில் இருக்கும் முழு நிலவை போல உன் வாழ்வும் பிரகாசமாய் இருக்க வேண்டும். என்று உன்னை வாழ்த்தும் இந்த குட்டி இதயம்.
  • நாம் பார்க்காத தூரம் இருந்தாலும் காதலினால் என்றும் சேர்ந்தே இருப்போம், இன்று போல் என்றும் உன் வாழ்க்கை சிறப்பாய் அமைய என் வாழ்த்துக்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • என் மகிழ்ச்சியின் இருப்பிடமாய் இருக்கும் உன்னை எப்போதும் விலக மாட்டேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • உன் பிறந்தநாள் மட்டும் அல்ல நீ என்னுள் பிறந்த நாளையும் கொண்டாடுவேன் மகிழ்ச்சியாக. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • வாழ்த்து அட்டையில் வாழ்த்துச் சொல்லி உன் வீட்டு அலமாரியில் ஒளிந்து கொள்ள ஆசை இல்லை. உன் மனதில் ஒளிந்து கொள்ள ஆசை படுகிறேன்.
  • எனக்குள் கலந்த கவிதை நீ. உன்னை என் கவிதை வரிகள் வாழ்த்தும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • பூவினம் சேராத பூ ஒன்று பூமியில் வந்து சேர்ந்த தினம் இன்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமைப் படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை. முகவரியும் தேவை இல்லை. நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது.உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • பிறப்பின் நகர்வு அற்புதமானது. ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • என் உடலும் உயிரும் ஒரு உருவமாகி, என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  • நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்

எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • பேராசை முடிகின்ற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது. புன்னகை தொடங்கும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறது. அன்பு இருக்கும் இடத்தில மட்டும் அனைத்தும் கிடைக்கிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • கொடுப்பவரை ஏழை ஆக்காமல் பெறுபவரை பணக்காரன் ஆக்காமல் இருக்கும் ஒரே ஒரு செயல் புன்னகை மட்டுமே. எனவே, எப்போதும் புன்னகையுடன் இரு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறது. நாம் யாரிடமாவது அன்பு காட்டும் போதும் நம் மீது யாரவது அன்பு காட்டும் போதும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • என்றும் ஆரோக்கியத்தோடும் நிறைவான தன்னம்பிகையோடும் உன் வாழ்க்கையை வெல்ல இந்த பிறந்தநாளில் வாழ்த்தும் உன் நண்பன்.
  • பூவின் இதழ் போல் உன் புன்னகை மலர இந்த பூந்தோட்டத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் உன் உள்ளம் அன்பால் நிறையட்டும். உன் கனவுகள் விண்ணை தொடட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • பேரின்பம் எதுவும் வேண்டாம். சின்னச் சின்ன சந்தோசங்கள் போதும், வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
  • வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி மகிழ்ச்சி என்ற ஒன்றின் ஒளிவீசி தித்திக்கும். எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்.
  • பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று..
  • பிறப்பு என்பது அழகான விபத்து; இறப்பு என்பது ஆபத்தான விபத்து.. இரண்டுக்குமிடையில் சில நாள் வாழ்க்கை இன்னுமொருமுறை பிறக்கவும் இறக்கவும் அஞ்சாதே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  • வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாயோ..? காற்றால் மலர்களை உதிர்த்து மழைத்துளியில் வெண்பகலை அழைத்து இதயத்தால் உன்னை வாழ்த்துகிறேன்..
  • வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து, வளம் பல பெற்று வாழ்க.. வளர்க வையத்தில் நின் புகழ். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
  • உனக்கு வாழ்த்து சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா? உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து, யோசித்து நானே புதியதாய் மாறிப்போனேன். யோசித்து யோசித்தும் பிறக்கவில்லை கவிதை? புதியதாய் இன்று பிறந்த நீயே கவிதைதானே எனக்கு..?
  • குறிஞ்சி பூப்பது 12 வருடத்திற்கு ஒரு முறையாம்.. யார் சொன்னது? ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது... அது உன் பிறந்த நாள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..             


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News