அவுரி எதற்கு பயன்படுகிறது? நன்மைகள் என்ன?..

Avuri Podi Uses in Tamil-இண்டிகோஃபெரா டிங்க்டோரியா, என்ற தாவரவியல் பெயர்கொண்ட இந்த அவுரி உண்மையான இண்டிகோ என்றும் அழைக்கப்படுகிறது.

Update: 2023-05-16 07:54 GMT

Avuri Podi Uses in Tamil

Avuri Podi Uses in Tamil-அவுரி இலை பொடி அனைத்து-இயற்கை சாயத்தை உருவாக்குவதில் முக்கிய மூலப்பவருளாக இருக்கிறது. இதன் அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் இது இயற்கையான அவுரி பொடி என்பதால் எந்த எதிர்விளைவுகளை இல்லாதது. இன்று பெரும்பாலான சாயங்கள் செயற்கையானவை. அதேசமயம் அவுரியில் இருந்து தயாரிக்கப்படும் சாயம் இயற்கையாகவே முடியின் ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.

தாவரவியல் பெயர்: இண்டிகோஃபெரா டிங்க்டோரியா

ஆங்கில பெயர் : True Indigo , Dyer's Indigo, Black Henna

தமிழ் பெயர் : அவுரி இலை

அவுரி செடியின் நன்மைகள்:

இது பசுந்தாள் உரமாகவும், இயற்கை நீலம் எடுப்பதற்கும் , தலைச்சாயம் மற்றும் ஹேர் ஆயில் தயாரிக்கவும் , சில குறிப்பிட்ட மருந்துகள் தயாரிக்கவும் அவுரி இலைகள் பயன்படுத்தப்படுகிறது. அவுரி, 18 வகையான விஷங்களை நீக்கும் தன்மை கொண்டது.

தீயினால் ஏற்படும் கொப்பளங்களை குணமாக்க அவுரி இலைகள் பயன்படுகிறது. முடி உதிர்வு பிரச்னைகளுக்காக தயாரிக்கப்படும் தைலங்களில், கரிசல் கரிசலாங்கண்ணி நெல்லிக்காய் இவைகளுடன் அவுரி இலைகளும் சேர்க்கப்படுகிறது. கப வாத நோய்களைை தீர்க்கிறது. மலச்சிக்கலையும் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப் பூச்சிகளைக் கொல்கிறது. மாலைக்கண் நோயை குணமாக்குகிறது.

இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாது பொருட்களை மருத்துவ ரீதியாக சுத்தம் செய்வதற்கு, அவுரி இலைகள் பயன்படுகிறது.

காமாலை குணமாக:

மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்தாக, அக்கால மக்களால் வீட்டு வைத்தியமாக அவுரி இலை பயன்படுத்தப்பட்டது. இன்றும் கிராமங்களில் பயன்படுத்துபவர்கள் உண்டு. அவுரி இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு, காய்ச்சிய வெள்ளாட்டுப் பாலில் கலந்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமடையும். கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் இவ்வாறு பயன்படுத்தலாம்.

புகைப்பிடிப்பதை மறக்கச்செய்ய:

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள் மிகவும் கொடூரமானது. இது நாம் அனைவரும் அறிந்ததே. சிலர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட மனதார எண்ணினாலும், முயற்சிகள் செய்தாலும் அவரால் முடியாமல் போய்விடும். அதற்கு சிறந்த தீர்வு அவரிச்செடி இலைகளாகும். புகை பிடிப்பதில் இருந்து விடுதலை கொடுக்கிறது அவுரி செடி மூலிகை இலைகள்.

அவுரி இலையை தேவையான அளவு எடுத்து ஒரு 10 மிளகுடன் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து 10 மில்லி அளவிற்கு புகைப்பிடிப்பவர்களுக்கு கொடுத்து வந்தால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் உடம்பை விட்டு வெளியேறி, நுரையீரல் நன்கு செயல்படும். சுவாசப் பாதையும் நன்றாக இருக்கும். இந்த மூலிகை மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள், வாரத்திற்கு மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் உண்ணும்போது புகைப்பிடிப்பதை விட்டுவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் புகை வாசனையே அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.

மாதவிடாய், கருப்பைகோளாறுகள் நீங்க

அவரி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, கொட்டைகரந்தை, குப்பைமேனி, செருப்படை ஆகிய மூலிகை இலைகளை சம அளவு எடுத்து காய வைத்து பொடி செய்து, அந்த பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது, பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய், மற்றும் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்பப் பை கோளாறுகள் அனைத்தும் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News