Anna Thangachi Kavithai Tamil-ஒரு செடியின் இரு மலர்கள்..! அண்ணன்-தங்கை..!
அண்ணன் என்பவன் தங்கைக்கு இன்னொரு அப்பா. அண்ணனுக்கோ தங்கை என்பவள் இன்னொரு தாய். இப்படி பாசத்தின் பிணைப்பாக இருப்பதே அண்ணன்-தங்கை.;
Anna Thangachi Kavithai Tamil
ஒரு கொடியில் மலர்ந்த இரு மலர்கள் என்பது உடன் பிறப்புகளுக்கு கொடுக்கப்படும் உள்ளார்ந்த வரிகள். அதிலும் ஒரு அண்ணனை உடைய தங்கை அப்பாவுக்கு இணையாக அண்ணனை நினைப்பர். அந்த அளவுக்கு அண்ணனும் தங்கையிடம் பாசமாக இருப்பார்.அண்ணனுக்கு என்றால் ஓடி ஓடி உணவு கொடுப்பதும், அண்ணனுக்கு படுக்கை விரிப்பதும், காலை எழுந்ததும் காபி கொடுப்பதும் அண்ணனுக்கு துணிகளை துவைத்துக்கொடுப்பதும் என ஒரு தாய் போல தங்கை செய்வார்.
Anna Thangachi Kavithai Tamil
அப்பா ஒன்று செய்தால் அண்ணன் அதைவிட மூன்று மடங்கு செய்வார். தங்கையை பாதுகாப்பதில் தந்தையை விட அண்ணனுக்கே பொறுப்பு அதிகம் இருக்கும். இதோ அந்த உயர்வான அண்ணன் தங்கை உறவை வெளிப்படுத்தும் கவிதை வரிகள்.
தங்கை கண்ணில்
கண்ணீர் வந்தால்
அண்ணன் நெஞ்சில்
ரத்தம் வருவது போன்ற
வலி இருக்கும்..!
தங்கை தன் அண்ணனை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டாள்..!
உள்ளம் கலந்து உறவு ஆனோம்.
உயிரே போகும் நிலை வந்தாலும்
இந்த அண்ணன் தங்கை உறவு
எப்போதும் இருக்கும்.
வாழ்க்கை என்னும் பயணத்தில்
தங்கைளின் ஜன்னல் ஒர
இருக்கைகள் அண்ணன்களே!
Anna Thangachi Kavithai Tamil
உடன் பிறக்கவில்லை என்றாலும்
உள்ளம் கலந்து உறவு ஆனோம்.
உயிரே போகும் நிலை வந்தாலும்
இந்த அண்ணன் தங்கை உறவு
எப்போதும் இருக்கும்.
தங்கைக்கு வாழ்க்கை
அமையும் வரை தன்
வாழ்க்கையை பற்றி
நினைக்க மாட்டான்
அண்ணன்..!
தங்கை உள்ளவனுக்கு
தங்க தங்கமாளிகை
தேவையில்லை..
தங்கை உள்ளமே
தங்கமாளிகை தான்..!
Anna Thangachi Kavithai Tamil
வலிக்காமல் குட்டுவது
எப்படி என்பது தங்கைகளுக்கு
மட்டுமே தெரியும்.. அது போல
வலித்தது போல் நடிக்க
அண்ணன்களால்
மட்டுமே முடியும்..!
கையில் மருதாணி வைத்து
அவசரமாய் என்னிடம்
ஓடி வரும் போது ஓர்
உலக அதிசயமாய்
என் தங்கை..!
தங்கையின் வாழ்க்கைக்காக
தன் வாழ்க்கையை கூட
தியாகம் செய்பவன்
அண்ணன் மட்டும் தான்..!
விடுமுறை தினங்களில்
சைக்கிள் ஓட்ட
கற்றுத்தருவாய் முயற்சித்து
மணலில் நான் விழுகையில்
மாரோடு அணைக்கும்
தாயும் நீயே அண்ணா..!
Anna Thangachi Kavithai Tamil
அண்ணன் தங்கை
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் அடுத்த
நொடியே இருவரும்
பேசிக் கொள்வார்கள்..
அது தான் உடன்
பிறந்த பாசம்..!
தன் தங்கைக்காக எந்த
சூழ்நிலையையும் தாங்கி
கொள்பவன் அண்ணன்
மட்டுமே..!
அண்ணன் தங்கை உறவு
என்பது வெறும் கையில்
கட்டும் கயிற்றில் வாழ்வதில்லை..
அது இதயத்தில் வாழ்வது..!
எந்த செயலையும் துணிந்து
செய்வான் தன்
தங்கைக்காக அண்ணன்..!
Anna Thangachi Kavithai Tamil
எத்தனை முறை அம்மா
திட்டினாலும் ஓய்வதே
இல்லை அண்ணன்
தங்கை சண்டை..!
தன் உயிர் உள்ளவரை
அண்ணனிடம் அன்பும் பாசமும்
காட்டுபவள் தங்கை..!
தங்கை அண்ணன் மீது
காட்டும் அதிகபட்ச பாசம்
சண்டையாக தான் இருக்கும்..!
மலர்களோடு மலராக
பூத்திருக்கும் ரோஜாவே
தங்கை.. உன்னைக்
காப்பதற்கு முள்ளாக
நானிருப்பேன்..!
Anna Thangachi Kavithai Tamil
என்றுமே மாறாத அன்பு
என் அன்புத் தங்கையே
உனக்கு மட்டுமே என்றுமே
இந்த அண்ணன் உனக்கு
கொடுப்பேன்..!
தங்கை என்றும் அண்ணனுக்கு
விலை மதிக்க முடியாத
பொக்கிஷம்..!
அண்ணன் எது வாங்கிக்
கொடுத்தாலும் தங்கை
குறை சொல்லாமல்
இருக்க மாட்டா.. ஆனா
எல்லோரிடமும் இது என்
அண்ணன் வாங்கித் தந்தது
என்று பெருமையாக
சொல்லுவாள்..!
வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரி அண்ணா…
சுவாசித்த இதயங்களில் நேசிக்க
வைத்த வரி தங்கை..!
தன் தங்கைக்காக எல்லோரையும்
எதிர்த்து நின்று போராடுபவன்
அண்ணன் மட்டும் தான்..!
Anna Thangachi Kavithai Tamil
உடல் முழுதும் இரத்தம் வந்தாலும்
அதையும் தாங்கிக் கொண்டு
தன் தங்கைக்காக உழைப்பவன்
தான் அண்ணன்..!
எனக்கு இன்னொரு தாய் தந்தை
என் அண்ணனே என்று
கூறுவாள் தங்கை..!