Pongal Katturai in Tamil-பொங்கல் விழா: மண்ணிற்கும் மாட்டிற்கும் நன்றி கூறும் விழா

Pongal Katturai in Tamil -தமிழர்கள் பல்வேறு விழாக்களை கொண்டாடினாலும், நன்றி மறவாமை பண்பினை உலகிற்கு பறை சாற்றும் வகையில் கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்;

Update: 2022-10-17 08:03 GMT

Pongal Katturai in Tamil -தமிழர்கள் பல விழாக்களை கொண்டாடுகின்றனர் அதில் முக்கியான விழாவான பொங்கல் திருநாள் பற்றிய கட்டுரை பதிவை இதில் காணலாம்.

இந்த பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை எடுத்துக் காட்டுகின்றது. தமிழர்கள் பல்வேறு விழாக்களை கொண்டாடினாலும், அவற்றில் மிகவும் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள் ஆகும்.

உழவர் தொழிலே அதிகம் பெருமையாக பேசப்படுகின்ற தொழிலாகும். ஆடி மாதத்தின் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தமிழர், சூரியனுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் பண்டிகையாகும். உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகள் நான்கு நாட்கள் நடத்த படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்களுக்கும் தனி தனி பெயருண்டு

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்குˮ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க மனிதர்களிடம் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நன்றி காட்டும் வகையில் மாடுகள், வயல்கள், பண்ணை உள்ளவர்கள் இந் நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவர்

இந்நாளில் புதுப்பானை வைத்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் வெல்லம் பால் இட்டுப் பொங்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைக்கும் திருநாளாகும்.

விவசாயமே வாழ்வியலுக்கு இன்றியமையாததாகும் அதை போற்ற வேண்டும் என்பதே இத்திருநாளின் சிறப்பு ஆகும்.

பயிர்கள் செழித்து வளரவும் உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் சூரிய ஒளி முக்கியமானது. எனவே தான் இந்த நாளில் சூரியனை வணங்கி பொங்கலிட்டு படையல் இடுவர். அத்தோடு விவசாயத்திற்கு உறுதுணையாய் இருக்கும் மாடுகளுக்கும், பால் தரும் மாடுகளுக்கும் பட்டிப் பொங்கல் இடுவது தமிழர்களின் சம்பிரதாயம் ஆகும்.

இப்பண்டிகை தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தும் திருவிழாவாகக் காணப்படுகின்றது. விவசாயத்தைஅடிப்படையாகக் கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர்.


போகிப் பொங்கல்

பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி ஆகும். பழையன கழிதல் புதியன புகுதல் என்பது போகி தினத்தின் சாராம்சம்

தமிழர் தம் விவசாய சுழற்சியில் கடைசி நாள். இது மார்கழிக் கடைசி தினம் அனுசரிக்கப்படும். தற்போதைய காலங்களில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழிக்கும் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும், பொங்கல் பண்டிகையின் முதல் நாள் விழா இதுவாகும். முந்தைய காலங்களில், ஒவ்வொரு வருடத்தின் விவசாய வேலைகள் முடிந்ததும், மீதி பொருட்களை தீயிட்டு எரிக்கும் வேலைகள் இன்று செய்யப்பட்டன. போகி பண்டிகை அன்று வீட்டு மாடங்களில் காப்பு கட்டும் வழக்கமும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடித்து புதுப்பிப்பார்கள்


பொங்கல் 

பொங்கல் பண்டிகையின் பிரதான தினம் இதுவாகும். தைப் பொங்கலானது இரண்டாவது பொங்கல் தினமாகும். குறிப்பாக தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகின்றது.

இந்திய மற்றும் அல்லாமல் உலகில் உள்ள அணைத்து தரப்பினராலும் பரவலாக கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து இத்துணை நாள் உழவர் தமக்கு உதவிய பூமிக்கு சேர்த்து பொங்கல் வைக்கும் தினமாகும். அறுவடை முடித்து அனைவரும் சந்தோசமாக இருக்கும் மாதம் தை என்பதால், தை முதல் தினம் இது கடைபிடிக்க படுகிறது. அனைவரும் புத்தாடை அணிந்து அனைத்து நண்பர் மற்றும் உறவினருடன் இணைந்து கொண்டாடப்படும் விழா இதுவாகும்

இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்துத் தரப்பு தமிழ் மக்களினாலும் கொண்டாடப்படுகின்றது.

மாட்டுப் பொங்கல்

வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழா மாட்டுப்பொங்கல் ஆகும். இது மூன்றாம் நாள் விழாவாகும்.

குறிப்பாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளை மாட்டிற்கும் இல்லத்தை செழிப்புற செய்யும் பசு மாட்டிற்கும் இடும் பொங்கல் இதுவாகும். இன்றைய தினம் மாடுகள் வசிக்கும் இடங்களை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி, உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்து பொங்கல் வைக்கப்படுகிறது.

மாடுகள் அனைத்தும் கொம்புகள் சீவிக் கொம்புகளில் வண்ணம் பூசப்படும். கூரான கொம்புகளில் சலங்கை அல்லது குஞ்சம் கட்டப்படும். திருநீறு பூசி குங்குமம், மஞ்சள் இடப்படும். புதிதாக மூக்கணாங் கயிறு தாம்புக் கயிறு போன்றவை அணிவிக்கப்படும்.

அத்தோடு உழவர் கருவிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு திருநீறு, குங்குமம், சந்தனம் பூசப்படும். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி காளைகள், பசுக்கள் அனைத்திற்கும் பொங்கல், பழம், கரும்பு முதலானவை கொடுக்கப்படும்.

காணும் பொங்கல்

நான்காவது நாள் கொண்டாடப்படும் விழா ஆகும். இதனை கன்னிப்பொங்கல் என்றும் அழைப்பார்கள். இதில் உற்றார் உறவினரை சந்தித்தல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் தினத்தில் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. தற்போதைய நவீன யுகத்தில் வாழ்த்து அட்டைகளுக்கு பதிலாக தற்போது குறுஞ்செய்திகள் பரிமாறப்படுவது அதிகமாக உள்ளது.

நவீன வளர்ச்சியின் காரணமாக தொலைத்தொடர்பு வளர்ந்து வருவதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. எனினும் பொங்கல் பண்டிகையில் வாழ்த்துக் கூறும் சாராம்சம் மாறவில்லை.

கோலங்கள்

பொங்கல் தினத்தில் தமிழ்ப் பொண்கள் பல வகைக் கோலங்களைப் போட்டு விழாவைச் சிறப்பிப்பார்கள். ரங்கோலிக் கோலம் உட்பட பல கோலங்கள் போடப்படும்.

நாகரீக வளர்ச்சியில் கலாசாரத்தின் தாக்கம் மற்றக் கலாசாரத்தின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும். ஆனால் பொங்கல் பண்டிகை மற்றைய கலாசாரத்தைத் தம்முடன் இணைத்துக் கொண்டு மென்மேலும் சிறப்புப் பெறுகின்றது.

இதற்குச் சான்றாகவே விதம் விதமான கோலங்களைத் தமிழ்ப் பெண்கள் போடுவதைத் தமிழ்க் கலாசாரம் ஒருபோதும் தடுப்பதில்லை.

இவ்வாறாக பொங்கல் பண்டிகையானது கோலாகலமாகக் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை உலகிற்கு பறை சாற்றுவதாகவும் உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News