alari poo-அலரி, அரளி இரண்டும் ஒன்றா..? தெரிஞ்சுக்கங்க..!
alari poo-அலரி என்றதும் பயந்து அலறி ஓடிவிடாதீர்கள்.இது மருத்துவ குணம் கொண்ட அலரிச் செடி மற்றும் அலரிப்பூ.;
அலரி பல்வேறு வகைகளில் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அலரி செடி பயன்கள் குறித்து பார்ப்போம் வாங்க.அலரியும்அரளியும் ஒன்றுதானா என்கிற சந்தேகம் எல்லோருக்கும் வரும்.
'அரளி' என்பது அலரியைப் போன்றதொரு புதர்ச் செடி. அரளி சிறு மரமாகக் கூட வளரும் இயல்பிற்று. அலரியைக் காட்டிலும் இதில் பால் அதிகம் சுரக்கும். அலரியின் கனி, நீண்ட தட்டையான ஒரு புற வெடிகனியாகும்.
alari poo
வேறு பெயர் – கத்துரிப்பட்டை, கனவீரம்,கரவீரம்,கவிரம்.
ஆங்கிலப் பெயர் – THE OLEANDER
தாவரவியல் பெயர் – NERIUM O DORUM SOLAND
அலரி செடி வகுப்பைச் சேர்ந்தது. வட இந்திய மலராக கருதப்பட்டாலும், தெனிந்தியாவிலும், பல இடங்களில் காடுகளில் தானே வளர்ந்து நிற்பதை ஏராளமாய்க் காண முடியும். இதில் வெண்மை, செம்மை, வெளிறிய மஞ்சள் நிறமுள்ள பூக்களை பூக்கும் வகைகளும் உள்ளன.
வெண்ணிற பூ பூக்கும் செடி செடி வெள்அலரி என்றும் மஞ்சள் நிறப் பூ பூக்கும் செடி மஞ்சள் அலரி என்றும் அழைக்கப்படுகிறது. செந்நிறப் பூக்களை பூக்கும் செடியும் உள்ளது. இதில் இரண்டு வகையான செவ் அலரி உள்ளன. ஒன்று நேரடியாக செம்மையாக இருக்கும் செவ்அலரி, இன்னொன்று குங்கும நிறத்திலான குங்கம அலரி என இருவகை நிறங்களிலும் இந்த அலரி செடி உள்ளது.
ஒவ்வொரு வகையிலும் ஓரடுக்கு முதல் பல அடுக்கு இதழுள்ள பூக்கள் உள்ளன. குணத்திலும், சுவையிலும், தோற்றத்திலும் சற்றேறக் குறைய ஒன்று போலவே இருக்கும். இந்த பூக்கள் ஆண்டு முழுவதும் பூக்கக்கூடியது.
இந்த அலரி பல மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக
அதன் பூ, வேர்பட்டை ஆகியன பயன்படுகின்றன. இதன் சுவை – கசப்பாக இருக்கும். வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு செயல் – வாந்தியுண்டாக்கி – EMETIC, நீர்மலம் போக்கி – PURGATIVE, புழுக் கொல்லி - ANTHELMITIC
alari poo
இதெற்கெல்லாம் இது பயன்படும்? இதன் பூ – சுரம், அரோசகம், குட்டம், தாகம், படை, கிரந்தி, இரத்தக் கட்டி, பித்த நோய், தலை எரிவு இவைகளைப் போக்கும்.
அலரி செடி பற்றிய பாடல் :
வெப்பருசி குட்டம் விதாகம் சொறிசிரங்கு
செப்பிரத்தம் புன்பித்தஞ் சென்னிஎரி – விப்படியில்
தங்குமோ கும்பத் தனத்தனங்கே ! வாசஞ்சேர்
கொங்கலறிப் பூப் பெயரைக் கூறு
-அகத்தியர் குணவாகடம்
வேர்ப்பட்டை – மருத்துவ குணம் :
alari poo
இதற்கு விஷம் நீக்கும் குணம் இருப்பதால், உயிரை போக்கும் இதை அரைத்து நல்லெண்ணையில் கலக்கி சாப்பிட குணமாக்கலாம்.
வேர்ப்பட்டையை, நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி காதில் 2 -3 துளி விட காதில் வடியும் சீழ் , காதுவலி காத்து விரணம் இவைகள் நீங்கும், காதில் தங்கிய பூச்சிகள் சாகும்.
மேற்படி படையுடன், அபினியும் சிறிது சேர்த்துக் காய்ச்சி மேற்கண்ட நோய்களுக்கு உபயோகிக்க மிக்க நன்மைதரும். வேர்ப்பட்டையின் சாறு தாம்பர களங்கத்தை செந்தூரிக்கும்.