மூன்று நிகழ்ச்சிகளில் ஒரே உடையில் காணப்பட்ட மோடி!
புது தில்லியில் நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே உடையில் இருந்தார்.;
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தலைநகரமே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. ஒருபக்கம் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், மறுபக்கம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடந்து வருகிறது.
ஆட்சியமைப்பது, மத்திய அமைச்சர்கள் என பல்வேறு விஷயங்களை மோடி தலைமையிலான பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசிக்க, எதிர்க்கட்சித் தலைவர் யார், அடுத்த செய்ய வேண்டியது என என்பதை இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசித்தனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் என்பதால் நேற்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுமே பரபரப்பாகக் காணப்பட்டார்கள். இதனிடையே, நேற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று நிகழ்ச்சிகளில் ஒரே உடையில் இருந்தது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சமூக ஊடகங்களில் விறுவிறுப்பாகப் பரவியது.
சுற்றுச்சூழல் நாள் என்பதால், புது தில்லியில் நேற்று காலையில் நடந்த சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்று நட்டார் பிரதமர் மோடி. பிறகு கூட்டணித் தலைவர்கள் கூட்டம், அதை முடித்துக்கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது என அனைத்தும் ஒரே உடையில் இருந்தார் பிரதமர் மோடி.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பல ஆண்டுகளாக ஒரே நாள் என்றாலும்கூட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு விதமான உடைகளைத்தான் பிரதமர் மோடி அணிந்து வருவார். நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போது ஒரே உடையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.