நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தேர்தல் கமிஷனில் முறையாக அனுமதி பெறாமல் ஓட்டு கேட்டதாக கூறி நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2025-01-20 11:30 GMT

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கட்சியினருடன் நேற்று காலை ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் கமிஷனில் அனுமதி பெறவில்லை

ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவதற்கு தேர்தல் கமிஷனில் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈரோடு டவுன் போலீசில் புகாரளித்தனர்.


சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு

தேர்தல் பிரிவு அதிகாரிகளின் புகாரின்படி, சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அனுமதியின்றி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் காலனியில் கொடி பறக்கவிட்டதாக புகார்

இதேபோல் ஈரோடு, சிதம்பரம் காலனியில் உள்ள வீடு ஒன்றின் மீது அனுமதி பெறாமல் திமுக கட்சிக் கொடியைப் பறக்கவிட்டதாக, திமுக உறுப்பினர் பிரகாஷ் மீது ஈரோடு டவுன் போலீசார் புகார் பதிவு செய்தனர்.

Tags:    

Similar News