மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!

மனைவி பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு பங்கு இல்லை.;

Update: 2024-04-28 11:22 GMT

நகைகள் (கோப்பு படம்)

'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், 'கடந்த 2009ல் திருமணத்தின் போது பெற்றோரால் எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட, 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கணவர் எடுத்துக் கொண்டார். அதை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

மனைவி சீதனமாக எடுத்து வரும் சொத்து, கணவரின் சொத்தாக மாறாது. அதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மாறாக, அவசர தேவைக்கு அந்த சொத்தை அவர் பயன்படுத்தியிருந்தால், அதை திருப்பித் தர வேண்டியது கணவரின் தார்மிக கடமை. இந்த வழக்கில், பெண்ணின் நகைகளை பயன்படுத்திய கணவர், அதற்கு ஈடாக 25 லட்சம் ரூபாயை மனைவிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News