டூடுளில் கூகிள் கொண்டாடும் முதல் டீச்சர், 'பாத்திமா ஷேக்'

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான பாத்திமா ஷேக் -ஐ இன்று கூகிள் டூடுளில் கொண்டாடுகிறது.

Update: 2022-01-09 05:30 GMT

கூகிள் கொண்டாடுகின்ற பாத்திமா ஷேக்.

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் கல்வியாளர் மற்றும் ஆசிரியை என்று பரவலாகக் கருதப்படும் பெண்ணியத்தின் பெருமைக்குரியவர், பாத்திமா ஷேக். அவரை டூடுல் மூலம் கூகுள் இன்று கொண்டாடுகிறது.

பாத்திமா ஷேக், சக முன்னோடி சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருடன் இணைந்து, 1848-ம் ஆண்டில், இந்தியாவில் பெண்களுக்காக துவக்கப்பட்ட முதல் பள்ளியில் சுதேச நூலகத்தை நிறுவினார்.

பாத்திமா ஷேக் 1831-ம் ஆண்டு புனேவில் இதே நாளில் பிறந்தவர. அவர் தனது சகோதரர் உஸ்மானுடன் வசித்து வந்தார். அவர் பிறப்பில் முஸ்லீமாக இருந்தாலும் சாதியற்ற சமூகத்தை உருவாக்க போராடியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கியதற்காக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட ஃபூல் சகோதரிகளுக்கு தனது  வீட்டில் அடைக்கலம் தந்தார்.

பாத்திமா ஷேக் வீட்டிலேயே சுதேச நூலகம் திறக்கப்பட்டது. இங்கு, சாவித்ரிபாய் ஃபுலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள்,தலித்,முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தனர்.

இந்தியாவில் முதல் முஸ்லீம் ஆசிரியை பாத்திமா ஷேக்.

'சமத்துவம்' என்கிற தனது உறுதியான கொள்கையினால் வாழ்நாள் முழுவதும், பாத்திமா ஷேக் தனது சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருத்தப்பட்டவர்களை பூர்வீக நூலகத்தில் கல்வி கற்க செய்தார். இந்திய சாதி அமைப்பின் கொடுமையில் இருந்து அவர்களை விடுவிக்க  வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சத்யசோதக் இயக்கத்தில் ஈடுபட்டவர்களை அவமானப்படுத்த முயன்ற உயர்சாதி வர்க்கத்தினரிடமிருந்து பெரும் எதிர்ப்பை அவர் சந்தித்தார். ஆனால்,பாத்திமா ஷேக்கும் அவரது கூட்டாளிகளும் அந்த எதிர்ப்புகளுக்கு சளைத்துவிடவில்லை. தொடர்ந்து அவர்கள் சாதியற்ற சமூகத்தை உருவாக்க போராடினார்கள்.

இந்திய அரசாங்கம் 2014ம் ஆண்டில் பாத்திமா ஷேக்கின் சாதனைகளை உருது பாடப்புத்தகங்களில் கொண்டு வந்து மற்ற கல்வியாளர்களுக்கு கிடைத்த பெருமையைப் போல இவருக்கும் கிடைக்க இவரை பெருமைப் படுத்தியது. 

Tags:    

Similar News