விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் 3விண்கலம்: பிரதமர் மோடி வாழ்த்து

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் 3விண்கலம். பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-14 10:20 GMT

விண்ணில் சீறிப்பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம்.

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக இன்று பிற்பகல் விண்ணில் வெற்றிகரமாக பாயந்தது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, இந்திய மக்கள் கொண்டாடினர். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

முன்னதாக, விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டன. சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியது.இதனை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1. 05 மணிக்கு துல்லியமாக தொடங்கியது. இந்நிலையில் கவுண்டவுன் முடிவடைந்து சரியாக 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் நிலவில் இறங்கியதும் தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இந்த வரலாற்று சாதனையின் மூலம் நிலவில் ஆராய்ச்சி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை இந்தியா பிடித்து உள்ளது. இந்த வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News