தாமரை தவிக்கவில்லை... பா.ஜ.க.,வும் வீழவில்லை..!
தாமரை தவிக்கிறதா... நிச்சயமாக இல்லை. வெளியான தேர்தல் முடிவுகள் அதைத் தான் கூறுகின்றன.
சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் முதல் முறையாக உச்ச பட்ச இரட்டை இலக்க வாக்குப்பதிவை உறுதி செய்து இருந்த சமயத்தில்.... வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பாஜகவுக்கு பெரும் ஆதரவு அளித்திருப்பதை உறுதி செய்து இருக்கிறது. பாஜக தனித்து களம் கண்ட நிலையில், போட்டியிட்ட 43 தொகுதிகளில் 29ல் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
அதேசமயம் காங்கிரஸ் போட்டியிட்ட 38ல் வெறும் 6 தொகுதிகளில் வென்று விட்டு இல்லாத அலப்பறை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறது. இதற்கு இங்கு உள்ள ஊடகங்களில் வெண் சாமரம் வேறு வீசி விட்டு கொண்டு இருக்கிறார்கள். தவிர வாக்கு சதவீதம் அடிப்படையில் காங்., கட்சிக்கு 12% அளவிற்கு குறைந்திருக்கிறது.
மேற்சொன்ன விஷயங்களோடு தனித்து களம் கண்ட பாஜகவுக்கு 25% வாக்கு விகிதாசாரம் கூடியிருக்கிறது. ஆன போதிலும் இரண்டாம் இடத்தைத் தான் பிடித்திருக்கிறது. ஆட்சியை பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சியினர் அமைக்க இருக்கிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் நிலவரம் வேறு.பாஜக ஆட்சியை தக்க வைத்து இருக்கிறார்கள். 50.1 கிலோ வினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது திரும்பியதாக ஓலமிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு, வெறுமனே 6015 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க (இவருக்கு எதிராக போட்டியிட்ட பா.ஜ.க., வேட்பாளருக்கு கிட்டத்தட்ட 59 ஆயிரத்திற்கும் மேல் ஓட்டுகள் விழுந்திருக்கும் நிலையில்....) ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விவசாய சங்கம் சார்பில் அலப்பறை கொடுத்துக் கொண்டு இருந்த குர்னாம் சிங் சதூனி வெறும் நான்கு இலக்க வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியிருக்கிறார்.
இந்த நிலையில் வினேஷ் போகத்தை முன்னிலை படுத்திக் கொண்டு இருந்த சமூக வலைத்தளங்களில் பெரிய அளவிலான அழிச்சாட்டியமே செய்து கொண்டு இருந்தனர். இங்கு உள்ள ஊடகங்களும் இது குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் சொல்லி வைத்தது போல உதயநிதி வாழ்த்து செய்தி ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுயிருக்கிறார். இது எல்லாம் என்னமாதிரியான டிசைனோ....
ஆக நாடு முக்கியம் இல்லை இவர்களுக்கு... நாட்டின் நலன் என்பதும் இவர்களுக்கு பின்னர் தான். இத்தனைக்கும் மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக தான் இருக்கிறது. ஹரியானா வெற்றியில் ஆர்எஸ்எஸ் பங்களிப்பு மிக பெரியது என்கிறார்கள். கள உழைப்பு வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது. நூறாண்டு காணும் அமைப்பிற்கு இன்னமும் சரியான அங்கீகாரம் என்பது இல்லை. இத்தனைக்கும் காஷ்மீர் நம் இந்திய தேசத்தோடு இருப்பதற்கு ஆர்எஸ்எஸ் மிக முக்கியமான காரணம் என ஜவஹர்லால் நேருவே வெளிப்படையாக இந்திய நாடாளுமன்றத்தில் வைத்தே அறிவித்திருக்கிறார். ஆனாலும் நம் தமிழகத்தில்........ வேண்டாம் வேதனைதான் மிஞ்சும்.
பெங்களூர் பாணி வாக்கு பதிவிலேயே ஜம்மு காஷ்மீரில் இத்தனை தூரம் வளர்ச்சி காண முடிகிறது என்றால் இன்னமும் சிரத்தையான தேர்தல் பணிக்காலத்தில்.... அதுசரி, அது என்ன பெங்களூர் பாணி.என்பவர்களுக்கு, நம்மூர் திருமங்கலம் ஃபார்முலா கேள்வி பட்டதுண்டா.....? அதுபோலவே தான் இதுவும்... ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வாக்கு செலுத்த வாக்குச்சாவடி வரை வந்தாலும், இஸ்லாமிய சமுகத்தவர் அதிகம் உள்ள சாவடியில் அல்லது அவர்கள் வசமாகும் வாக்குச்சாவடியில், குறிப்பிட்ட நபர் தான் அனைவருக்கும் வாக்கு செலுத்திக் கொண்டு இருப்பார். கண்ணால் கண்ட நிஜம் இது. இத்தனைக்கும் பெங்களூர் எப்படிப் பட்ட நகரம் என்பதை கண்கூடாக காணலாம். இங்கேயே இப்படி இருக்க ஜம்மு காஷ்மீர் பற்றி கேட்கவே வேண்டாம்.
ஜனநாயகம் என்பது நிஜத்தில் ஜனங்களின் நாயகம் தானா ?. ஆன போதிலும் இன்றளவும் சாமானிய மக்களின் துருப்பு சீட்டு அது ஒன்று நம் இந்திய திருநாட்டில்.
தேர்தல் முடிவுகள் வெளியான அந்த இரண்டு மாநிலங்களுமே மிக மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஒன்றில் பாஜக மற்றதில் பிரிவினை பேசிய .... பேசும் காங்கிரஸ் துணை போகும் பிராந்திய கட்சி. அதிலும் குறிப்பாக 370 மீண்டும் கொண்டு வருவோம் என பொது வெளியில் உளறிக்கொண்டிருக்கும் ...... என்று அந்த கும்பலை விரட்டி அடித்து விடுகிறோமோ அன்று தான் நம் இந்திய தேசத்தின் நிஜ விடுதலை என்று சொல்லும் அளவுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். பொறுத்து இருந்து பார்க்கலாம்., என்ன செய்கிறார்கள் என்று.