ரத்தன் டாடாவை கவர்ந்த இளம் நண்பர் சாந்தனு : கண்ணீர் அஞ்சலி..!
ரத்தன் டாடாவின் உதவியாளராகவும் நெருங்கிய இளம் நண்பராகவும் இருந்த சாந்தனு நாயுடு அவரது இழப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
RNT அசோசியேட்ஸின் பொது மேலாளரும், ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளருமான சாந்தனு நாயுடு, வணிக அதிபரும் தேசியத்தின் அடையாளமாக விளங்கியவருமான ரத்தன் டாடாவின் மரணம் குறித்து தனது வருத்தத்தையம் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கௌர வத் தலைவராகப் பணியாற்றிய டாடா, தனது 86-வது வயதில் காலமானார்,, டாடா என்ற வணிக தொழில் நிறுவனத்துக்கு என்று ஒரு தனி வர்த்தக களத்தை இந்தியா மட்டுமன்றி உலக அளவில் உருவாக்கியவர ரத்தன் டாடா. அந்த ஒரு பாரம்பரிய நிறுவனத்தை விட்டுச் சென்றுவிட்டார்.
ரத்தன் டாடாவின் இளம் உதவியாளரும் நெருங்கிய நபராக இருந்த நாயுடு, லிங்க்ட்இனில் ஒரு பதிவில், தனது வழிகாட்டிக்கு அஞ்சலி செலுத்தினார்: "இந்த நட்பு இப்போது என்னுடன் விட்டுச்சென்ற இடைவெளியை என் வாழ்நாள் முழுவதையும் நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பது காதலுக்கு செலுத்த வேண்டிய விலை. என் அன்புள்ள கலங்கரை விளக்கத்துக்கு குட்பை ."
ரத்தன் டாடாவுக்கும் நாய்டுவுக்குமான நட்பு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஆகும். அவர்களின் நட்பின் கதை 2014 இல் தொடங்கியது. நாயுடு, விலங்குகள் நலனில் ஆர்வமாக இருந்தார். தெரு நாய்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்க ரிஃப்ளெக்டிவ் காலர்களை உருவாக்கினார்.
அவரது இரக்கத்தால் ஈர்க்கப்பட்ட ரத்தன் டாடா, நாயுடுவை நேரில் அழைத்து பேசினார். அவரது பேச்ஹில் மயங்கிய ரத்தன் டாடா அவரை தனது உதவியாளராக பணிபுரிய கேட்டுக்கொண்டார். அன்றில் இருந்து ரத்தன் டாடா எங்கு சென்றாலும் அந்த இளம் நண்பனும் உடன் சென்றார். மேலும் பல ஆண்டுகளாக, அவர்களது தொழில்முறை உறவு நெருங்கிய நட்பாக உருவானது.
நாயுடு டாடாவுக்கு ஒரு நிலையான துணையாக ஆனார். குறிப்பாக வணிக அதிபரின் வயது முதிர்ந்த காலங்களில், அவருக்குப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார். அவ்வப்போது அரிதான பொதுத் தோற்றங்களை வெளியில் பகிர்ந்துகொண்டார். அவர் ஒரு பணியிடத்தை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பலருக்கு உத்வேகமாக மாறிய மனிதருடன் ஆழமான தொடர்பைப் பகிர்ந்து கொண்டார்.
ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் காண்டு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம் குறித்த செய்தி உலகெங்கிலும் இருந்து அஞ்சலி செலுத்துவதற்கு வழிவகுத்தது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறுகையில், டாடா நிறுவனம் டாடா குழுமத்தை பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி தேசத்தின் கட்டமைப்பிற்கும் பங்களித்தது.
தேசம் துக்கம் அனுசரிக்கும்போது, சாந்தனு நாயுடுவின் வார்த்தைகள் பலரிடம் எதிரொலித்தது - தொழில்துறையின் தலைசிறந்த மனிதனுக்குப் பொருத்தமான அஞ்சலி. ஆனால் ஞானம் மற்றும் பணிவு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக அவர் விளங்கினார்.