இயற்கை அழகு , முல்தானி மட்டியின் அதிர்ச்சி தகவல்கள்

கோடை பருவத்தில் உங்கள் முகத்தை பளபளக்க வைக்கும் முல்தானி மட்டியின் பயன்கள் தகவல்கள் தெரிந்து கொள்வோமா;

Update: 2025-02-18 09:56 GMT
பாரம்பரிய பாட்டி வைத்தியத்தில் இருந்து நவீன அழகு நிலையங்கள் வரை முல்தானி மட்டி ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், முல்தானி மட்டி என்பது பாகிஸ்தானின் முல்தான் எனும் ஊரின் ஆற்றுப்படுகைகளில் இருந்து கிடைக்கும் ஒரு வகை சிறப்பு மண் என்கிறார். இதன் வேதியியல் பெயர் அலுமினியம் சிலிகேட் என்பதோடு, இதில் மக்னீசியம், துத்தநாகம், சிலிகான் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
இது பாறைகளில் இருந்து சிறு கட்டிகளாக கிடைக்கிறது, வெள்ளை, தந்த நிறம், மஞ்சள் என பல வண்ணங்களில் கிடைத்தாலும், அரை வெண்மை நிறத்தில் இருப்பதே மிகவும் தரமானதாக கருதப்படுகிறது. முல்தானி மட்டியின் தனிச்சிறப்பு என்னவென்றால் இது சருமத்தை சுத்தப்படுத்துவதோடு, இயற்கையான முறையில் வெளுப்பாக்கவும், இறந்த செல்களை அகற்றவும், அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை உறிஞ்சி எடுக்கவும் செய்கிறது. இதில் உள்ள துத்தநாகம் பருக்களால் ஏற்படும் காயங்களை விரைவாக ஆற்றும் தன்மை கொண்டது. ஆனால் இதனை பயன்படுத்தும் போது சில முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். அதிகமாக தேய்த்தலோ, நீண்ட நேரம் வைத்திருத்தலோ சருமத்தின் மேல் அடுக்கை பாதிக்கக்கூடும்.
 முல்தானி மட்டியை சரியான முறையில் பயன்படுத்த, இதனை தூய்மையான பன்னீரில் குழைத்து, மென்மையான பிரஷால் முகத்தில் தடவி, பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். பரு பிரச்சனை உள்ளவர்களுக்கும், அதிக எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனளிக்கும். கோடை காலத்தில் எரிச்சல் ஏற்படுபவர்கள் இதனுடன் சந்தனத்தூள் கலந்து பயன்படுத்தலாம். மேலும் கால் கட்டு புதினா இலைகள், வேப்பிலை விழுதுகளுடன் கலந்து பயன்படுத்தினால் பருக்கள் விரைவில் மறையும். கரும்புள்ளி, வெண்புள்ளி போன்ற பிரச்சினைகளுக்கும் முல்தானி மட்டி சிறந்த தீர்வாக அமைகிறது. அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கருவிகளால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று அபாயம் இல்லாமல், இயற்கையான முறையில் தீர்வு காண இது உதவுகிறது.
Tags:    

Similar News