முடி உதிர்வதை தடுக்க, 4 முக்கிய வைட்டமின்கள்

உணவில் வைட்டமின்கள் சேர்த்து, உங்கள் முடியை ஆரோக்கியமாக வளர்த்துக்கொள்ளுங்கள்;

Update: 2025-02-18 11:05 GMT
தற்காலத்தில் முடி உதிர்தல் என்பது பெரும்பாலான மக்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலில் ஏற்படும் ஊட்டச்சத்துக்களின் குறைபாடாகும். குறிப்பாக வைட்டமின் D முடி வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் முடி வேர்களை வலுவாக பராமரிப்பதோடு, புதிய முடி வளர்வதற்கும் துணை புரிகிறது. சூரிய ஒளியில் இருந்து இயற்கையாக கிடைக்கும் இந்த வைட்டமின், முட்டை மஞ்சள் கரு, மீன் வகைகள், பால் பொருட்கள் போன்றவற்றிலும் நிறைந்துள்ளது.
 அடுத்ததாக, வைட்டமின் E ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு, முடியை ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களால் ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த வைட்டமின் பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை வகைகள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. வைட்டமின் C முடியின் வலிமைக்கு அவசியமான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு சுவை பழங்களில் இது அதிகம் உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து, அது முடி வளர்ச்சியை பாதிக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பீட்ரூட், கல்லீரல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
இவற்றுடன் பயோட்டின் (வைட்டமின் B7), துத்தநாகம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதிக மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, முறையற்ற உணவுப் பழக்கம் போன்றவையும் முடி உதிர்வுக்கு காரணமாகின்றன. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சரியான உணவுப் பழக்கங்களை கடைபிடித்து, தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் மூலம் பெற்றுக் கொள்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, அடர்த்தியான, பளபளப்பான தலைமுடியைப் பெற முடியும்.
Tags:    

Similar News