ஹெல்மெட் அணியும்போது, முடி கொட்டி யிருக்கும்! காப்பாற்ற 5 ரகசியங்கள்

ஹெல்மெட் அணியும்போது முடிகொட்டுவதை சரி செய்ய 5 அற்புத டிப்ஸ்கள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்;

Update: 2025-02-18 05:23 GMT

இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஹெல்மெட் அணிவது கட்டாயமாகியுள்ளது. இருப்பினும், ஹெல்மெட் அணிவதால் பலரும் தலைமுடி சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தலையின் வேர்ப்பகுதியில் ஏற்படும் அரிப்பு, முடி உதிர்வு, வறட்சி, பொடுகு போன்ற பிரச்சனைகள் பலரையும் ஹெல்மெட் அணிவதிலிருந்து பின்வாங்க வைக்கின்றன. 

 உயிரைக் காக்கும் ஹெல்மெட் அணிவது அவசியமானது, அதே நேரத்தில் சரியான பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.

முதலாவதாக, ஹெல்மெட்டின் பராமரிப்பு மிக முக்கியம். பெரும்பாலானவர்கள் ஹெல்மெட்டை வாகனத்தின் அடியில், மேசை மீது அல்லது கப்போர்டில் வைத்து விடுகின்றனர். இது தவறான பழக்கம். ஹெல்மெட்டை எப்போதும் காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் கிருமிகள் படர்வதைத் தடுக்கலாம்.

வாரம் ஒருமுறையாவது ஹெல்மெட்டை துடைத்து, சானிடைசர் அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது தலையின் வேர்ப்பகுதியில் தூசி மற்றும் அழுக்கு படிவதைத் தடுக்கும்.

ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள் தங்கள் தலைமுடி சுகாதாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முடியில் இருந்து பொடுகு மற்றும் எண்ணெய்ப்பசை ஹெல்மெட்டில் படிவதைத் தவிர்க்க, தலைமுடியை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

 ஹெல்மெட் அணியும் முன் தலைமுடியில் பருத்தி துணி அல்லது ஷால் அணிவது நல்லது. இது வியர்வையை உறிஞ்சி, தலையில் ஈரப்பதம் தங்குவதைத் தடுக்கும். குறிப்பாக பெண்கள் தலைமுடியை மிக இறுக்கமாக கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பின்னல், கொண்டை, குட்டை போன்றவற்றை மிக இறுக்கமாகக் கட்டினால் முடி வேர்கள் பலவீனமடையும். அதே நேரத்தில் முடியை முற்றிலும் தளர்வாக விடுவதும் சரியல்ல. முடி முழுவதையும் ஒன்றாகச் சேர்த்து தளர்வான பேண்ட் கொண்டு கட்டி, மேலே பருத்தித் துணி அணிந்து பின்னர் ஹெல்மெட் அணிவதே சிறந்தது. இத்தகைய எளிய பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், பாதுகாப்புக்கு அவசியமான ஹெல்மெட்டை அணிந்து கொண்டே தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பேண முடியும்.

Tags:    

Similar News