ஆங்கிலேயரை எதிர்த்த வீரப்பெண்மணி வேலுநாச்சியார் பற்றி தெரியுமா? ....படிங்க....
velu nachiar history in tamil சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர்களுள் ஒருவர்தான் வீரப்பெண்மணி வேலுநாச்சியார். அவருடைய வீர வரலாற்றினைப்பற்றி காண்போம்...
velu nachiar history in tamil
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி நடந்த போது சுதந்திரம்பெறுவதற்கு முன்னர் நம் தலைவர்கள் கடும் துயரங்களைச் சந்தித்துள்ளனர். அந்த வகையில் நாட்டின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்களுள் ஒருவர் வேலுநாச்சியார்.இவர் பெண் என்றாலும் திறமை மிகுந்தவராக திகழ்ந்தார்.
ராணி வேலுநாச்சியார் 18ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் ராணியாக இருந்தவர். மேலும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார்ஆவார்.
velu nachiar history in tamil
சிவகங்கை அரண்மனை
velu nachiar history in tamil
1730-ஆம் ஆண்டு, ராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.
1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.சில காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
முதல் ராணி வேலுநாச்சியார்
1780ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல்,நகரங்களை வென்ற பிறகு, கடைசி யுத்தமாக மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைக்கொண்டு அந்நிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர். அதன் பிறகு ராணியின் தோரணையோடு, ராணி வேலுநாச்சியார் சிவிகையின் மூலம் படைவீரர்கள் புடை சூழ விழாக்கோலம் பூண்ட சிவகங்கைவேலு நாச்சியார், அதன் பிறகு சிவகங்கை சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
velu nachiar history in tamil
velu nachiar history in tamil
இறுதி நாட்கள்
1793ல்வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்குத் துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.
velu nachiar history in tamil
வேலுநாச்சியார் மணிமண்டபம்
velu nachiar history in tamil
சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18. சூலை 2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
அருங்காட்சியகம்
வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
நினைவு தபால்தலை
ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.
சிவகங்கை சீமையை ஆண்ட மன்னர்கள் பட்டியல்
1728 - 1749 - முத்து விஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்,1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்,1780 - 1790 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்,1790 - 1793 - வெள்ளச்சி நாச்சியார் வேலு நாச்சியார் மகள்,1793 - 1801 - வேங்கை பெரிய உடையனத் தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் கணவர்,1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்,1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்,1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்,1841 - 1848 - போ. உடையணத்தேவர்,1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்,1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி,1877 - முத்துவடுகநாதத்தேவர்,1878 - 1883 - துரைசிங்கராஜா,1883 - 1898 - து. உடையணராஜா உள்ளிட்டோர் சிவகங்கையை ஆண்ட மன்னர்கள் ஆவார்கள்.
ஜமீன்முறை ஒழிப்பு
1892-ஆம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார். 1910-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் 1985-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது