Quarterly exam leave in tamilnadu 2023 ஒரு நாள் மட்டுமே காலாண்டு விடுமுறையா? மாணவர்கள் குமுறல்

Quarterly exam leave in tamilnadu 2023 ஒரு நாள் மட்டுமே காலாண்டு விடுமுறையா? என தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இணையத்தில் தங்களது குமுறலை பகிர்ந்துள்ளனர்.

Update: 2023-08-30 10:38 GMT

தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ஒரு நாள் தானா என மாணவர்கள் தங்களது உள்ளக்குமுறலை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி அம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது.


காலாண்டு விடுமுறை

quarterly exam leave in tamilnadu 2023பொதுவாக காலாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு சுமார் ஒரு வார காலம் வரை விடுப்பு கிடைப்பது உண்டு. ஆனால் இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பு  மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்று தான் கூறவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

செப்டம்பர் மாதம் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும் அவர்களுக்கு விடுமுறை தொடங்கிவிடும். ஆனால் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு வழங்குவதில் மிகப்பெரிய குறைபாடு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் தான் விடுப்பா?

quarterly exam leave in tamilnadu 2023அதன்படி செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை அவர்களுக்கு காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார கால விடுப்பில் ஒரு நாள் மட்டுமே விடுப்பு நாளாகும் மற்றவை விடுமுறை நாளாக அமைந்துவிடுகிறது என மாணவர்கள் மனக்குமுறலில் உள்ளனர்.

அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி விழா அன்றைய தினம் ஏற்கனவே அரசு விடுமுறை நாளாகும். 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30ஆம் தேதி சனிக்கிழமை வழக்கமான விடுமுறை. அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். அக்டோபர் 2 தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாள் என்பதால் அரசு விடுமுறை நாள் ஆகும்.


மாணவர்கள் குமுறல்

quarterly exam leave in tamilnadu 2023ஆக ஒரு நாள் மட்டுமே அதாவது செப்டம்பர் 29ந்தேதி ஒரு நாள் மட்டுமே தங்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என பள்ளி மாணவர்கள்  மனக்குமுறலில் உள்ளனர். அவர்கள் தங்களது மனக்குமுறலை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விதுறைக்கு கோரிக்கை

quarterly exam leave in tamilnadu 2023மேலும் மாணவர்களின் பெற்றோரும் காலாண்டு விடுமுறையில் உறவினர்கள் இல்லம் மற்றும் சுற்றுலா செல்வதற்கு போடப்பட்டிருந்த திட்டம் மற்றும் கனவும் கானல் நீராக போய்விட்டதாக கருதுகிறார்கள். எனவே தமிழக அரசின் பள்ளி கல்வி துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இதில் உடனடி கவனம் செலுத்தி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் விமுறை நாட்கள் கிடைக்கும் வகையில் காலாண்டு விடுமுறை திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News