Negative Effects Of Cell Phones-தூங்காம இருந்தால் இதெல்லாம் நடக்கும்..! செல்போன் வேண்டாம்..!

உறக்கம் என்பது உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள இயற்கை கொடுத்த வரம். அதை முறையாக பயன்படுத்துவோம்.

Update: 2023-10-16 11:31 GMT

Negative Effects Of Cell Phones-உடல் ஆரோக்யத்துக்கு தூக்கம். (கோப்பு படம்)

Negative Effects Of Cell Phones ,effects of cell phones, too much cell phone use,sleeping hours,sleeping hours for human,sleeping hours for kids, sleeping hours for adults

சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது உடலில் இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.


அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும், ஏன்? அது ஒரு வரம் என்று கூட கூறலாம். அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கும் நமது உடலுக்கு தரும் ஓய்வுதான் இந்த தூக்கம். ஏனென்றால் மீண்டும் நம்மை புத்துணர்வுடன் செயல்பட வைக்க இந்த தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. தூக்கம் நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நமது உடலை ஆரோக்யமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

Negative Effects Of Cell Phones


நமது உடலுக்குத் தேவையான தூக்கத்தை கொடுக்கவில்லை என்றால், தேவையில்லாத நோய்களை உண்டாக்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று அர்த்தம். சரியான தூக்கமின்மை நமக்கு மிகப்பெரிய ஆபத்தை கூட விளைவிக்கலாம். நாம் சுறுசுறுப்புடன் செயல்பட இதயம் ஆரோக்யமாக இருக்க வேண்டும், அந்த இதயத்தை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள போதுமான அளவு தூங்க வேண்டும்.

பெரியவர்கள் இரவில் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பெரியவர்களுக்கு அதிகமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

பொதுவாக எல்லோருமே குறைந்தது 7 மணி நேரம் உறங்குதல் அவசியம். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் பெண்களுக்கு வழக்கத்தை விட பல மணிநேர தூக்கம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

Negative Effects Of Cell Phones


தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்னைகள்

சுமார் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பெரியவர்களுக்கு ஆஸ்துமா, மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற பல வகையான உடல்நல பிரச்னைகள் எளிதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சரியான தூக்கமின்மை மாரடைப்பு, பக்கவாதம், இதயநோய் போன்ற பிரச்னைகளை அதிகப்படுத்துகின்றன.

நீரழிவு நோய்

முறையான தூக்கம் நமது உடலிலுள்ள இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்திருக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது நீரழிவு நோய் ஆகும். இது நமது உடலில் இரத்த நாளங்களை அதிகம் சேதப்படுத்தும்.


தூங்கும் போது ஏற்படும் மூச்சுத் திணறல்

உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளால் தூங்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படும். தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் ஆனது உங்களுக்கு உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை தடுக்கிறது. சுவாசப் பாதையை திரும்பத்திரும்ப தடுக்கும் போது இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால் வெகு சீக்கிரம் உங்களது சுவாசத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Negative Effects Of Cell Phones


ஆழ்ந்த உறக்கம் வர என்ன செய்யணும்?

ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் சீக்கிரம் படுக்கைக்கு செல்ல வேண்டும். இதை நேரம் தவறாமல் அனைத்து நாட்களிலும் கடைபிடிக்க வேண்டும். அதேபோல் காலை நேரத்தில் சீக்கிரமாக எழுந்து இயற்கையோடு நேரம் கழிக்க வேண்டும்.

தூங்குவதற்காக அட்டவணை போட்டு அதனை பின்பற்ற வேண்டும். காலை நேர சூரிய ஒளி உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. உறங்குவதற்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது. உங்கள் படுக்கை அறையில் அமைதியாக உறங்குவதற்கு ஏற்ப தயார் செய்து வைத்திருங்கள்.

Negative Effects Of Cell Phones

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

இந்தியாவைப் பொறுத்தவரை மூன்றில் ஒரு பங்கு முதியவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். பொதுவாக வயது முதிர்ந்தவர்கள் சுமார் 7 மணி நேரமாவது உறங்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரியான தூக்கமின்மை பின்வரும் காலங்களில் உடலில் அதிக பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே தூக்கத்திற்கான சரியான நேரத்தை ஒதுக்குங்கள்.


இரத்த அழுத்தம் அதிகரிப்பு

முறையான தூக்கம் நமது இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். ஒருவேளை தூங்குவதில் சிக்கல்கள் ஏதேனும் இருப்பின் உங்களின் இரத்த அழுத்தம் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இது இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களை அதிகப்படுத்துகிறது.

Negative Effects Of Cell Phones

உடல் எடை அதிகரிப்பு

நமது உடல் எடையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள முறையான தூக்கம் மிகவும் அவசியம். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சரியான நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். இல்லை என்றால் பின்வரும் காலங்களில் பெரும் நோய்களுக்கு ஆளாவார்கள். தூங்காமல் இருப்பது மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.


செல்போன் பயன்பாடு

தற்போதைய இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பதின்ம வயதினர் அதிகமாக செல்போன் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் கீழ்காணும் பாதிப்புகள் ஏற்படும்.

Negative Effects Of Cell Phones

கழுத்து அழுத்தம்

ஒரு நாளில் பல மணிநேரம் கழுத்தைக் குனிந்தவாறு ஃபோனை பார்ப்பதால் உங்கள் கழுத்தில் கடுமையான அழுத்தம் ஏற்படும். புவியீர்ப்பு விசையால் உங்கள் தலையை முன்னோக்கி சாய்த்து வைத்திருப்பது உங்கள் முதுகுத்தண்டில் 25 முதல் 30 கிலோ வரை ஒரு சக்தியை செலுத்தும்.


மோசமான தூக்கம்

அதிகப்படியான ஸ்மார்ட்ஃபோன் உபயோகம் உங்களை மனரீதியாக ஈடுபாட்டுடன் வைத்திருக்கும். ஆனால் திரையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உண்மையில் உறங்கும் திறனில் தலையிடலாம். அதனால் தூக்கமின்மைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

Negative Effects Of Cell Phones

டெண்டினிடிஸ்

அதிகமாக தட்டச்சு செய்வது உங்கள் கட்டைவிரலில் உள்ள தசைநாண்கள் வீக்கமடைந்து புண் ஆகலாம்.

கவனச்சிதறல்

வாகனம் ஓட்டும்போது உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது கடுமையான விபத்தை விளைவிக்கும். அதே நேரத்தில் கவனச்சிதறல், நடைபயிற்சியின்போது செல்போன் பயன்பாடு காயத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் மொபைலை பார்ப்பதால்,நீங்கள் இறங்கவேண்டிய இடத்தை தவறவிடலாம்.


உறவுகள்

செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடு, நல்ல தொடர்புகள் மற்றும் உரையாடல்களுக்கு ஒரு தடையாக அமையலாம். இது உறவினர் மத்தியில் திருப்தி குறைவதற்கு வழிவகுக்கும். அதிகப்படியான சாதனங்களைப் பயன்படுத்துவதால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும் போது துண்டிக்கப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தும்.

Negative Effects Of Cell Phones

செறிவு மற்றும் கற்றல் குறைபாடு

உங்கள் ஸ்மார்ட்ஃபோனை எப்பொழுதும் பார்க்க விரும்புவது உங்கள் படிப்பில் கற்றலின் கவனத்தை பாதிக்கலாம். மேலும் நீங்கள் வகுப்பு அல்லது பணிச்சூழலில் இருக்கும்போது உங்கள் மனநிலையை திசைதிருப்பலாம்.

குறைவான உடல் செயல்பாடு

உங்கள் விரல் நுனியில் உணவு மற்றும் பொழுதுபோக்கை அணுகுவதன் மூலம், உங்களின் உடல் இயக்க செயல்பாடுகள் குறைந்து போகலாம். சுறுசுறுப்பாக இல்லாததால் இது நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்யத்தை பாதிக்கலாம்.


கண்பார்வை பிரச்னைகள்

உங்கள் செல்போனின் திரையை எப்போதும் பார்ப்பது உங்கள் ஆரோக்யத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் அனைத்து திரைகளும் மனித கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர் ஒளியை வெளியிடுகின்றன.

Negative Effects Of Cell Phones

தனிப்பட்ட தொடர்பு இல்லாமை

குறுஞ்செய்தி மற்றும் உடனடி செய்திகள் தொலைபேசி அழைப்பு அல்லது நேரில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான உங்கள் தேவையை மாற்றும். அதனால் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறன் பாதிக்கும்.

பழகுவதில் அழுத்தம்

குழந்தைகள் தங்கள் சக நண்பர்களுடன் பழகுவதில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதைப்போன்ற உணர்வை சமீபத்திய சாதனங்கள் ஏற்படுத்தலாம். இந்த மனஅழுத்தத்தால் யாருடனும் சேராமல் தனித்து இருக்க முயற்சிப்பார்கள்


Negative Effects Of Cell Phones

வயதுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட தூக்கத்தின் அளவு

3 முதல் 5 வயது வரை 10 முதல் 13 மணிநேரம், தூக்கம்

6 முதல் 12 வயது வரை 9 முதல் 12 மணி நேரம்

13 முதல் 18 வயது வரை 8 முதல் 10 மணி நேரம்

பெரியவர்கள் இரவில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம்

Tags:    

Similar News