Low Sugar Symptoms in Tamil-உடலில் சர்க்கரை குறைந்தால் என்னாகும்? தெரிஞ்சுக்கங்க..!

உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான எரிபொருள் அவசியம். உடல் இயக்கத்தின் எரிபொருள் குளுக்கோஸ். அது குறைந்தால் லோ சுகர் ஏற்படுகிறது.

Update: 2024-01-07 11:51 GMT

low sugar symptoms in tamil-சர்க்கரை அளவு குறைவால் ஏற்படும் சோர்வு (கோப்பு படம்)

Low Sugar Symptoms in Tamil

உடலின் சீரான இயக்கத்திற்கு குளுக்கோஸ் இன்றியமையாதது. இதில் ஏற்படும் மாற்றத்தால் நமது உடலில் நாம் பல விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. உடலுக்கு சிறந்த எரிபொருளாக குளுக்கோஸ் செயல்படுகிறது.

உடலின் அனைத்து செல்களுக்கும் இது ஆற்றலை வழங்குகிறது. நமது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் சில அறிகுறிகள் வெளிப்படும், அதனை வைத்து நாம் எந்தநிலையில் இருக்கிறோம் என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.

Low Sugar Symptoms in Tamil

இரத்த சர்க்கரையின் அளவு குறைவதை நாம் கவனிக்காமல் விட்டோமேயானால் பல ஆரோக்கிய சிக்கல்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். ரத்த சர்க்கரை அளவு குறைவதனால் நீரிழிவு நோயாளிகள் சில சுய நினைவை இழந்து கோமா நிலைக்கு கூட சென்று விடுவார்கள்.

சில சமயம் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இரத்த சர்க்கரை அளவு குறையும்பொழுது நமது உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை நாம் கவனித்து அதற்கு தகுந்த சிக்கிச்சை அளிக்கவேண்டியது அவசியமானதாகும்.

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதை வைத்து, பாதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இது அதிகரிக்கும் போது நீரிழிவு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதேசமயத்தில் சக்கரை அளவு குறையும் போது, உடலில் குறைந்த ஆற்றல் நிலவுகிறது.

Low Sugar Symptoms in Tamil

நோய் பாதிப்பை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தன்மை மற்றும் உணவுப் பழக்கத்தை வைத்து தான் இரத்தத்தில் சக்கரை அளவு குறைவது மற்றும் அதிகரிப்பது தீர்மானிக்கப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் திடீர் வீழ்ச்சி, திடீர் உயர்வை விட ஆபத்தானது.

இதை அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ள முடியாது. எனவே நமது இரத்தத்தில் சர்க்கரை சீராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, வழக்கமான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

அறிகுறிகள்

திடீரென உடலில் சோர்வு ஏற்படுவது, உடலின் சில பகுதிகள் மரத்துப் போகுதல், மயக்கநிலைக்கு செல்லுதல், கை மற்றும் கால்களில் உதறல் எடுப்பது போன்றவை இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கான முக்கிய அறிகுறிகளாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பிட்ட சில அறிகுறிகள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான காரணங்களாகவும் சொல்லப்படுகின்றன.

Low Sugar Symptoms in Tamil

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சில சமயங்களில் இனிப்பு சாக்லேட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும், சில சமயங்களில் ஓரிரு சாக்லேட்டுகள், பழச்சாறுகள் மற்றும் சர்க்கரைப் பொருட்களை மிதமாக எடுத்துக் கொள்வது நல்லது.

சிறிது நேரம் கழித்து, உங்கள் அறிகுறிகள் மறைந்து, நீங்கள் உங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள். உணவுப் பழக்கத்தை அளவுடன் வைத்துக்கொள்வது, தேவையான அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது போன்றவை உங்களை இயக்கநிலையில் வைத்திருக்கும்.

உடலுக்கு தேவையான அளவு உணவு கிடைக்காத போது சர்க்கரை அளவு குறையும். எப்போதும் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ள உணவை சாப்பிட்ட பிறகு, 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கவேண்டும்.

Low Sugar Symptoms in Tamil

இரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வரும் வரை 15-15 நிமிட இடைவெளியில் இதைச் செய்யுங்கள். எதிர்காலத்தில் சர்க்கரை அளவு குறையும் போது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இப்பயிற்சி உதவும்.

சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது பரிசோதனை மேற்கொண்டு, தங்களுடைய நோய் பாதிப்பு அளவை தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சாப்பிடும் உணவில் ஏதாவது மாறுபாடு இருந்தாலோ, அல்லது சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. எப்போதும் உங்களுடைய உடலில் இரத்தத்தில் சக்கரை அளவை நார்மலாக வைத்திருப்பதை கடைப்பிடிக்க வேண்டும்.

Low Sugar Symptoms in Tamil

அதற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம். மாதத்தில் ஒருமுறையாவது சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

Tags:    

Similar News