Implantation Symptoms In Tamil-கரு கூடுதல் எப்போது நடக்கும்? தெரிஞ்சுக்கங்க..!

கர்ப்பத்திற்கான தொடக்கம் கரு கூடுதலில் தொடங்குகிறது. பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் விந்தணுக்கள் இணைந்து கருக்கூடுதல் நடக்கிறது.

Update: 2023-10-06 07:37 GMT

Implantation Symptoms In Tamil-கருப்பதிவு எப்படி நடக்கிறது (கோப்பு படம்)

Implantation Symptoms In Tamil

கரு எவ்வாறு உருவாகிறது?

பாலியல் உறவு வைத்துக் கொண்ட உடனேயே கரு உருவாகிவிடுவதில்லை. பொதுவாகவே ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள், மாதவிடாய் தாமதமாவதன் மூலமாகவும், மசக்கை ஏற்படுவது, காலையில் எழுந்தவுடன் குமட்டல் உணர்வு இருப்பது ஆகியவை மூலமாகவும் கர்ப்பத்தினை உறுதிப்படுத்தலாம். எனவே, இதற்கு, முந்தைய மாதவிடாய் நாளுடன் கணக்கிட்டுப் பார்க்கும் போது, குறைந்தது 30 - 45 நாட்களாவது ஆகும்.


Implantation Symptoms In Tamil

மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி பாலியல் உறவு வைத்துக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பின்னர் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் விந்தணுவும் பெண்ணின் ஃபாலோபியன் டியூபில் ஒன்று சேரும். இதன் பெயர் தான் ஃபெர்டிலைசேஷன்.

இவ்வாறு பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் விந்தணுவும் சேருவதற்கு, பெண் ஓவிலேஷன் நாட்களில் இருக்க வேண்டும். ஒவிலேஷன் என்பது ஒரு பெண் தன்னுடைய கருப்பையில் இருந்து கரு முட்டைகளை வெளியிடும் நேரம் ஆகும்.

மாதவிடாய் 28 முதல் 30 நாட்கள் என்று இயல்பாக இருக்கும் நாட்களில், மாதவிடாய் முடிந்த 12 நாட்கள் முதல் 17 நாட்கள் வரை, கருமுட்டை வெளியேறத் தயாராக இருக்கும். இந்த நாட்களில் பாலியல் உறவு வைத்துக் கொண்டு, கருமுட்டையுடன் விந்தணு இணைந்த பிறகு, இது கர்ப்பப்பையை நோக்கி செல்வதற்கு 3 முதல் 4 நாட்கள் ஆகும்.

Implantation Symptoms In Tamil

பிறகு இந்த முட்டை கருப்பையின் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும். உடல் கருமுட்டையை வளர்ப்பதற்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்து கர்ப்பத்தை உறுதியாக்கும். இந்த ஓவிலேஷன் நாட்கள் ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் காலத்துக்கு ஏற்றார் போல மாறுபடும்.


கரு எப்போது உருவாகும்?

லண்டன் தேசிய உடல்நல சேவைகள் வெளியிட்ட அறிக்கையின்படி, 100 பேரில் 84 தம்பதிகள், எந்த கருத்தடை முறையையும் பயன்படுத்தாமல், ரெகுலர் செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம், ஒரு ஆண்டுக்குள் கருத்தரிக்க முடியும்.

Implantation Symptoms In Tamil

மேலும் பெரும்பாலான தம்பதிகள் தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் ஆறு மாதத்துக்குள் கருத்தரிக்க முடியும் என்பதையும் ஒருசில மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் ஒரு ஆண்டு வரை இயல்பான, ஆரோக்யமான பாலியல் உறவு வைத்துக் கொண்ட பிறகும் கருத்தரித்தல் ஏற்படவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து தெரிந்து கொண்டு அதற்கான சிகிச்சைகளைப் பெற வேண்டும்.

Implantation Symptoms In Tamil


கருத்தரித்தல் தாமதமாவதற்கான காரணங்கள் :

ஒவ்வொரு பெண்ணுக்கும் கருத்தரிப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். பொதுவாக பின்வரும் காரணங்கள் கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன.

1. வயது

2. பொதுவான ஆரோக்யமின்மை அல்லது உடல் நலக் கோளாறுகள்

3. இனப்பெருக்கம் சார்ந்த பிரச்னைகள்

4. பாலியல் உறவில் சரியாக ஈடுபடாமல் இருப்பது அல்லது பாலியல் உறவில் ஈடுபடும் நாட்கள் மிகவும் குறைவாக இருக்கலாம்

Implantation Symptoms In Tamil


கரு உண்டாகாமல் இருப்பதற்கான உடல் பாதிப்புகள் :

ஒரு பெண்ணின் உடல் நலன் மற்றும் இனப்பெருக்க ஆரோக்யம் ஆகிய இரண்டுமே அவர் எந்த அளவுக்கு விரைவாக கருத்தரிக்க முடியும் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.

அதில் பின்வரும் நோய்கள் அல்லது பாதிப்புகள் பெண்கள் கருத்தரிப்பதை தடுக்கிறது.

1. ஹார்மோன் குறைபாடுகள் - எண்டோக்ரைன் ஹார்மோன் குறைபாடு, கருப்பை நீர்க்கட்டி, தைராய்டு குறைபாடு போன்றவை

2. உடல் ரீதியான பாதிப்புகள் - உடல் பருமன், அனீமியா, அனோரெக்சியா, அல்லது அதிகமாக உடற்பயிற்சி செய்வது

3. கருப்பை பலமின்மை, சீரற்ற மாதவிடாய், கருக்குழாய் அடைப்பு, கருப்பை சுவர்கள் பாதிப்பு, ஹார்மோன் குறைபாடு போன்றவை

Implantation Symptoms In Tamil


பெண்கள் ஆரோக்யமாக இருந்து, ஆண்களுக்கு இருக்கும் உடல் நலக் குறைபாட்டால், கரு உருவாகாமல் போகலாம். அவற்றில், பின்வருவன அடங்கும்

1. குறைவான விந்தணு எண்ணிக்கை

2. ஆரோக்யமற்ற விந்தணு

3. விந்தணுக்கள் இல்லாமல் போகும் குறைபாடு

கருத்தரித்தலை எவ்வாறு உறுதி செய்வது?

ஓவிலேஷன் தேதியின் அடிப்படையில், பாலியல் உறவு வைத்துக் கொண்ட பிறகு, அதிகபட்சம் 14 நாட்கள் வரை காத்திருக்கவேண்டும். பின்னர், வீட்டிலேயே ஹோம் பிரக்னன்ஸி கிட்களைப் பயன்படுத்தி, சிறுநீர் பரிசோதனை செய்தால், கரு உருவாகி உள்ளதா என்பதை இலகுவாக கண்டறிய முடியும்.


கர்ப்பத்தின் முதல் வாரத்தில் பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன:

  • அதிகரித்த உடல் வெப்பநிலை
  • வீங்கிய மார்பகங்கள்
  • மிகவும் சோர்வாக உணர்தல்
  • அதிக தூக்கம்
  • பிடிப்புகள் மற்றும் வயிற்று பிரச்னைகள்

மாதவிடாய் முடிந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு கர்ப்பம் ஏற்படுகிறது?

உண்மையில், மாதவிடாய் முடிந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு, அது பெண்களின் அண்டவிடுப்பின் அளவைப் பொறுத்தது, மாதவிடாய் முடிந்து சுமார் 12 முதல் 14 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் தனது துணையுடன் உறவை ஏற்படுத்தினால், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். 

Tags:    

Similar News