தந்தை பெயரை பயன்படுத்தாமல் ஹீரோவான சூர்யா! இன்று பூஜை..!
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் ஃபீனிக்ஸ் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.;
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் தற்போது நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவரது முதல் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் 'Pheonix வீழான்' எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜை இன்று (நவம்பர் 24) சென்னையில் நடைபெற்றது.
இந்த பூஜையில் விஜய் சேதுபதி கலந்துகொள்ளவில்லை. அவர் மலேசியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ள வில்லை என்று தெரிவித்த சூர்யா, தனக்கும் படக்குழுவுக்கும் காலையிலேயே வாழ்த்து தெரிவித்துவிட்டார் என்றார்.
மேலும் இந்த படத்திலும் சரி இனிமேல் நடிக்கப்போகும் படத்திலும் சரி தன் தந்தையின் பெயரை பயன்படுத்தமாட்டேன். தானே சொந்தமாக உழைத்து பெயரை சம்பாதிப்பேன் என்று முடிவெடுத்துள்ளார் சூர்யா. அதனால்தான் இந்த படத்தில் சூர்யா என்ற பெயரிலேயே அறிமுகம் ஆகிறார்.
இப்படத்தில் சூர்யா சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் குறித்து இயக்குநர் அனல் அரசு கூறுகையில், "இது ஒரு விளையாட்டு தொடர்பான அதிரடி திரைப்படமாகும். சூர்யா சேதுபதி ஒரு புதிய முகமாக திரையில் தோன்றுகிறார். அவரது திறமையை இந்த படத்தில் பார்க்கலாம். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்" என்று கூறினார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான 'சிந்துபாத்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் 'விடுதலை 2' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஹீரோவாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதியின் முதல் படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.