Sasikumar Without Beard-நடிகர் சசிகுமாருக்கு 'நோ என்ட்ரி' சொன்ன நட்சத்திர ஓட்டல்..!
Sasikumar Without Beard-இயக்குநர் சசிகுமார், தாடி இல்லாமல் ஏன் தோன்றமாட்டார் என்பதற்கு, அவரே சுவாரசியமான நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்தார்.;
Sasikumar Without Beard-இயக்குநரும் நடிகருமான சசிகுமார், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'ஏன் தாடி இல்லாமல் நடிக்க மாட்டீர்கள்..?' என்ற கேள்வி எழுப்பியபோது, அதற்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை நினைவுகூர்ந்து பதில் கூறினார்.
அது, சசியின் குருநாதரான இயக்குநர் பாலாவின் 'தாரைதப்பட்டை' படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நேரம். அப்போதுபடத்துக்கான போட்டோ ஷூட் நடந்தது. படத்தில், சசிகுமாருக்கு தாடி மற்றும் நீண்ட சடைமுடி கொண்ட ஹேர்ஸ்டைல் அழுக்கு வேட்டி, சட்டை என டிரெஸ் காஸ்ட்யூம். இந்தக் கோலத்தில்தான் போட்டோஷூட் நடத்தப்பட்டது. படத்தில் சசி ஏற்ற கேரக்டர் அப்படி.
போட்டோஷூட் முடித்தவுடன், 'இந்த கெட்டப் எப்படி இருக்கு?' என்பதைக் காட்டவும் அதுகுறித்து தகவல் தெரிந்துகொள்ளவும் தனது நண்பரும் இயக்குநருமான சமுத்திரக்கனிக்கு போன் செய்து, 'உடனே பார்க்கணுமே… எங்கே இருக்கீங்க சகோ?' என்று கேட்டுள்ளார் சசி. குறிப்பிட்ட ஒரு நட்சத்திர ஓட்டலின் பெயரைச் சொல்லி, தான் அங்கிருப்பதாகவும் அங்கேயே வரும்படியும் சசிக்கு சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார்.
உடனே, குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற சசி நுழைவாயிலை நெருங்கியபோது, அங்கிருந்த காவலாளி சசிகுமாரை ஓட்டலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. எவ்வளவோ சொல்லியும் 'நோ எண்ட்ரி' சொன்ன காவலாளி கேட்கவேயில்லை. உடனே சசி, சமுத்திரக்கனிக்கு போன் செய்து, 'சகோ, ஓட்டல் வாசலில் நிற்கிறேன். உள்ளே விடமாட்றாங்க. நீங்க இறங்கி வாங்க' என்றிருக்கிறார்.
அதன்பிறகு, ஓட்டலின் உள்ளேயிருந்து வெளியில் வந்த சமுத்திரக்கனி, சசிகுமாரைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டு, 'என்ன சகோ..? எனக்கே அடையாளம் தெரியல. இவங்களுக்கு எப்படி தெரியும்' என்று கூறியபடியே உள்ளே அழைத்துச் சென்றார்.
இதனைத்தான் நினைவுகூர்ந்து பதில் சொன்ன சசிகுமார் தாடி இல்லாமல் தோன்றமுடியாது என்பதை இதன்மூலம் தெரிவித்தார்.
அதுசரி, இயக்குநர் சசிகுமார் என்றாலே தாடியும் அவரது ட்ரேட்மார்க் சிரிப்பும்தானே ஆணித்தரமான அடையாளம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2