ஏ ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்!

சிவகார்த்திகேயனை அம்போ என விட்டுவிட்டு சல்மான் படத்துக்கு போகும் ஏ ஆர் முருகதாஸ்.

Update: 2024-06-12 11:45 GMT

சிவகார்த்திகேயனை அம்போ என விட்டுவிட்டு சல்மான் படத்துக்கு போகும் ஏ ஆர் முருகதாஸ்.

சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஏ ஆர் முருகதாஸுடன் இணையும் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் விஜய்க்கு அடுத்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்க காத்திருக்கிறார். அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அவர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஏ ஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயனை தவிக்க வைத்துவிட்டு அவர் சல்மான் கான் படத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஜூன் மாதம் முழுக்க சல்மான் படத்தை முடித்துவிட்டு ஜூலையில்தான் சிவகார்த்திகேயன் படத்துக்கு திரும்புவாராம் ஏ ஆர் முருகதாஸ். 


தமிழ் சினிமாவில் ஏ ஆர் முருகதாஸுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரது படங்களுக்கு போதுமான ஓபனிங் கிடைத்துவிடும். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் அட்டர் பிளாப் ஆகி, விநியோகஸ்தர்கள் கையைச் சுட்டுவிட, அதன்பிறகு பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார் முருகதாஸ்.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸ் இப்படி படங்களே இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விசயமாகும். அதேநேரத்தில் அவரை திரும்பவும் கொண்ட வர, சிவகார்த்திகேயன் சம்மதித்தார். ஏ ஆர் முருகதாஸ் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். தனது அமரன் படம் ஷூட்டிங் நடந்து கொண்டே இருந்தாலும் ஒருபுறம் ஏ ஆர் முருகதாஸுக்கு முழு ஒத்துழைப்பும் அளித்தார். 


அமரன் படத்துக்காக கடின உழைப்பைப் போட்ட சிவகார்த்திகேயன் அடுத்த நாளே முருகதாஸ் படத்தில் கலந்துகொண்டார். இதையெல்லாம் மனதில் வைக்காமல் சிவகார்த்திகேயன் படத்தை நிறுத்திவிட்டு சல்மான் கான் கூப்பிட்டதும் அங்கு சென்றுவிட்டார் முருகதாஸ். இதனால் சிவகார்த்திகேயன் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. 

அதேநேரம் அமரன் படமும் தற்போது இல்லை என்பதால் புரமோசனுக்காக பயன்படுத்தும் வாய்ப்பும் அமையவில்லை. இதுகுறித்து ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனிடம் பேசியபோது அவர் பெருந்தன்மையாக நீங்கள் சல்மான் படத்துக்கு செல்லுங்கள் என்று தெரிவித்துவிட்டார். இதுதான் சிவகார்த்திகேயனின் பெருந்தன்மை. 


அதேநேரம் இதை இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்கிறார்கள். ஏப்ரல் கடைசி வாரம் தொடங்கி,மே மாதம் முழுக்க சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால் அமரன் படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே சென்றதால் ஏ ஆர் முருகதாஸ் காக்கவைக்கப்பட்டார். இப்போது அவர் சல்மான் கானை காக்க வைக்க முடியாது. எனவே இதில் எந்த தவறும் இல்லை என்கிறார்கள். 

Tags:    

Similar News

கொடி (2016)
எல்கேஜி (2019)
சர்கார் (2018)
ஜோக்கர் (2016)