ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய சிம்பு! கெத்தான லுக்கில் அசத்தல்!
மட்டன் பிரியாணி போட்ட மன்மதனே என ரசிகர் ஒருவர் சிம்புவை பாராட்டியிருக்கிறார். சிம்புவின் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு தன் கைப்பட பிரியாணி பரிமாறியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.;
மட்டன் பிரியாணி போட்ட மன்மதனே என ரசிகர் ஒருவர் சிம்புவை பாராட்டியிருக்கிறார். சிம்புவின் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு தன் கைப்பட பிரியாணி பரிமாறியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மிகவும் உறுதியான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அவர் படம் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் சர்ச்சையிலேயே சிக்கியிருந்தாலும் அவரை விட்டுக் கொடுக்காத ரசிகர்கள் அவருக்கு கிடைத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சில சுமார் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த சிம்பு, பின் காதல் மற்றும் அதிரடி படங்கள் மூலம் டிராக்குக்கு திரும்பினார். கௌதம் மேனன் உள்ளிட்ட இயக்குநர்களின் படத்தில் மிகப் பிரமாதமாக நடித்து அசத்தும் சிம்பு, அஅஅ உள்ளிட்ட சில மொக்கை படங்களிலும் நடித்தார்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த சிம்புவா இது என ரசிகர்களே ஆச்சர்யப்பட்டு நிற்கும் அளவுக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தனது மார்க்கெட்டை கிட்டத்தட்ட ஜீரோவாக்கிவிட்டார். அவருக்கு இனி படம் கிடைக்காது ரெட் கார்டு என பேசப்பட்ட நிலையில், வந்தா ராஜாவாதான் வருவேன் என்கிற சூர மொக்கை படத்தில் நடித்து தான் கம்பேக் கொடுத்ததாக நம்பினார். ஆனால் அதன்பிறகு நிலை அறிந்து உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தார்.
மாநாடு படம் அவருக்கு கம்பேக்காக அமையும் என்று பேசப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே வெற்றியடைந்த அந்த படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படமும் அவருக்கு கைக்கொடுத்தது. அதன்பிறகு பத்து தல படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் இந்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போதைக்கு #STR48 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். ரஜினிகாந்துக்கு எழுதப்பட்ட இந்த கதையை இப்போது சிம்புவுக்காக கொண்டு வந்திருக்கிறார் தேசிங்கு.
இடையில் தன் நிலையை மாற்றி சிம்பு மற்றவர்களை அப்செட் ஆக்கியதற்கு காரணம் நயன்தாராவுடனான காதல்தான் என்கிறார்கள். அவர் நினைப்பில்தான் இப்போதும் சிம்பு இருக்கிறாராம். அதனால்தான் கூட்டுத்தொகை 9 வரும்படி எல்லா அப்டேட்களையும் வெளியிட வற்புறுத்துகிறாராம். போகும் இடமெல்லாம் லூசுப் பெண்ணே பாட்டையும் பாடி தெறிக்கவிடுகிறாராம் சிம்பு.
இப்போது கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிப்பதால் இனி முன்னணி நடிகர்களுக்குரிய முறையில் நடந்துகொள்வார் எனவும் சர்ச்சையில் சிக்கமாட்டார் எனவும் ரசிகர்கள் நம்புகிறார்கள். அதன்படி முதன்முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை அழைத்து நேரில் சந்தித்திருக்கிறார்.
ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் பேசியது மட்டுமின்றி அவர்களுக்கு பிரியாணி உணவு பரிமாறி பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சிம்பு. அவர் பேசும்போதே ஒருவித அமைதியான தொணியில் பேசுவதாகவும் அவரிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதை அறிய முடிகிறது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.