என்னது! Shah Rukh Khan இத்தனை படங்களில் ராணுவ வீரராக நடித்திருக்கிறாரா?

ஷாருக்கான் கிட்டத்தட்ட 6 படங்களில் ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.

Update: 2023-09-11 04:11 GMT

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது ஜவான் திரைப்படம். இந்த படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இதே போல பல முறை அவர் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். அந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ஷாருக் கான் ராணுவ வீரராக நடித்து அசத்திய படங்களின் பட்டியலை இப்போது காண்போம்.

ஆர்மி

ஷாருக்கான் ராணுவ வீரராக நடித்த முதல் படம் 1996-ஆம் ஆண்டு வெளியான "ஆர்மி". இதில், ஒரு நேர்மையான ராணுவ வீரராக நடித்த ஷாருக்கான், ஒரு கேங்ஸ்டரால் கொல்லப்படுகிறார். அவரது மனைவி, தனது கணவனை கொன்றவனை பழிவாங்க ஒரு பெரிய ராணுவப்படையை உருவாக்கி வில்லனை பழிதீர்ப்பதே இந்தப் படத்தின் கதை.

2001-ஆம் ஆண்டு வெளியான "ஒன் டூ கா ஃபோர்" படத்திலும், 2004-ஆம் ஆண்டு வெளியான "மே ஹூ நா" படத்திலும் ஷாருக்கான் ராணுவ வீரராக நடித்தார். இவை இரண்டுமே துப்பறியும் கதையம்சம் கொண்ட படங்கள்.

ஒன் டூ கா ஃபோர்

ஷாருக்கான் ஜுஹி சாவ்லா மற்றும் ஜாக்கி ஷெராஃப் இணைந்து நடித்தப் படம் ஒன் டூ கா ஃபோர். இந்தப் படத்தில் அர்ஜுன் என்கிற ராணுவ வீரரின் கதாபாத்திரத்தின் நடித்திருப்பார் ஷாருக்கான். தனது உயிர் நண்பன் ஜாவேதின் மரணத்திற்குப் பிறகு அவரது குழந்தைகளை வளர்த்து வருகிறார் அர்ஜுன். ஆனால் ஜாவேதின் மரணம் எதேச்சையானது இல்லை.. அது ஒரு கொலை.. என்று தெரியவரும்போது அதனை விசாரணை செய்கிறார் அர்ஜுன். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க கிடைக்கிறது.

மே ஹூ நா

ஷாருக்கான் , சுனீல் ஷெட்டி, சுஷ்மிதா சென் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மே ஹூ நா. ராணுவ அதிகாரியின் மகள் ஒருவரின் உயிரை, பாதுகாக்க கல்லூரி மாணவராக அவருடன் இருக்கிறார் ஷாருக்கான். தமிழில் ஏகன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இந்தப் படம். அஜித், நயன்தாரா அதில் நடித்திருந்தார்கள்.

வீர் ஸரா

2010-ஆம் ஆண்டு வெளியான "வீர் ஸரா" படத்தில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் காதலை காட்டியிருந்தார்கள். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜப் தக் ஹே ஜான்

2012-ஆம் ஆண்டு வெளியான "ஜப் தக் ஹே ஜான்" படத்தில், ஒரு ராணுவ வீரரின் காதலை ஷாருக்கான் மீண்டும் ஒருமுறை அழகாக நடித்திருந்தார். இந்தப் படம் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பதான்

கடந்த ஆண்டு வெளியான "பதான்" படத்தில், ஒரு ராணுவ வீரரின் கதையில் ஷாருக்கான் மிகவும் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும்.

Tags:    

Similar News