சரவணன் - மீனாட்சி இணை பிரியப் போறாங்களா? இப்பதான குழந்தை பிறந்தது?
காதலித்து திருமணம் செய்து மணமுறிந்து டைவர்ஸ் கேட்கும் நடிகர், நடிகைகள் மத்தியில் செந்தில் - ஸ்ரீஜா தம்பதி எடுத்துக்காட்டாக நிற்கிறார்கள்.;
சரவணன் மீனாட்சி தொடர் இணையரான செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதி பிரிந்துவிட முடிவு செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ஸ்ரீஜா கொடுத்த பேட்டியில்தான் இந்த பரபரப்புத் தொடங்கியுள்ளது. ஆனால் உண்மை இதுவல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமடைந்த ஜோடி செந்தில் - ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் இந்த சீரியலுக்கு பிறகே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. உண்மையிலேயே கணவன் மனைவி போல அப்படி பொருந்தி நடிப்பார்கள். சீரியல் ரசிகர்களே இவர்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்களா என ஏங்கும் அளவுக்கு இருந்தது.
தொடரின் போது காதலிக்கத் தொடங்கிய இவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேவ் என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு அவர்களுக்கு 10 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தனர்.
அதில் பேசிய ஸ்ரீஜா, தங்களுக்குள் அளவு கடந்த காதல் இருந்ததாகவும் ஆனால் சில சமயங்களில் சண்டை மிகப் பெரிய அளவில் சென்று மனம் கசந்து ஒருவரை ஒருவர் பிரிந்துவிடலாம் என்கிற அளவுக்கு போய்விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இப்போது எங்கள் மகனை பார்ப்பதற்கே நேரம் சரியாகிவிடுகிறது. சண்டை போடுவதற்கெல்லாம் நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.
தங்களது மண வாழ்க்கை பற்றி பேசிய செந்தில், திருமணம் காதலித்து செய்தாலும் வீட்டில் பார்த்து முடித்தாலும் முதல் 3 ஆண்டுகள் மிகக் கடுமையான போர்க்களம்தான். அப்போது உருவாகும் பிரச்னைகள் பேசி தீர்த்துவிட்டால் போது அடுத்தடுத்து ஒருவர் மீதான இன்னொருவரின் புரிதல் அதிகமாகிவிடும் என்றார்.
காதலித்து திருமணம் செய்து மணமுறிந்து டைவர்ஸ் கேட்கும் நடிகர், நடிகைகள் மத்தியில் செந்தில் - ஸ்ரீஜா தம்பதி எடுத்துக்காட்டாக நிற்கிறார்கள்.