5 வேடங்களில் சந்தானத்தின் புதிய படம்.. விரைவில் அறிவிப்பு

Santhanam Tamil Movie - நடிகர் சந்தானம் 5 வேடங்களில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது.

Update: 2022-08-19 05:46 GMT

Santhanam Tamil Movie - - காமெடி நடிகர் சந்தானம் மீண்டும் கோலிவுட்டில் கம்பேக் கொடுப்பார் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சந்தானம் புதிய படம் ஒன்றில் 5 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

சின்னத்திரையிலிருந்து தமிழ் திரையுலகிற்கு நடிகர் சந்தானம் காமெடியான அறிமுகமானார். தொடக்க காலத்தில் காமெடியனாகவே படங்களில் நடித்து வந்த சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அது முதல் தொடர்ந்து கதாநாயகனாகவே அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த 'டிக்கிலோனா' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் முனைப்பில் தற்போது சந்தானம் உள்ளார்.

santhanam new movie name 

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் சந்தானம் 5 கெட் அப்புகளில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த கோவர்தன் இந்த படத்தை இயக்குகிறார்.

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. சந்தானம் நடிப்பில் தற்போது 'ஏஜென்ட் கண்ணாயிரம்', 'சர்வர் சுந்தரம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News